Kitchen Sink: இரவு தூங்கச் செல்லும் முன் சிங்க் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை போடுங்க.! இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

Published : Jul 06, 2026, 10:57 AM IST

Kitchen Sink Cleaning with Salt: தூங்கச் செல்வதற்கு முன்னர் சிங்க் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை போட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகக் காணலாம். 

PREV
15
Kitchen Sink Cleaning with Salt

பெரும்பாலான வீடுகளில் சிங்க்கை சுத்தம் செய்ய விலையுயர்ந்த கிளீனர்களை பயன்படுத்துகிறோம். இருந்தாலும் சிங்க் அவ்வபோது அடைத்துக் கொள்வது, துர்நாற்றம் வீசுவது, தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படும். இதற்காக சிலர் பிளம்பரை அழைத்து செலவு செய்து பழுது பார்க்கிறார்கள். ஆனால் மேற்கூறிய எதுவும் இல்லாமல் உப்பை மட்டும் பயன்படுத்தி சிங்க்கை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  Interesting Facts: இடி இடிக்கும் போது மரத்துக்கு கீழ ஏன் நிக்க கூடாதுனு தெரியுமா? தெரிஞ்சிக்க வேண்டிய ஷாக்கிங் உண்மைகள்.!

25
சிங்க் தொட்டியில் துர்நாற்றம்

சமையலறை சுத்தத்தில் சிங்க் தொட்டி முக்கிய பங்காற்றுகிறது. காய்கறி கழுவுதல், பாத்திரங்களை கழுவுதல், கை கழுவுதல் போன்ற பல வேலைகள் சிங்க்கில் செய்யப்படுகிறது. ஆனால் இரவில் எவ்வளவு தான் சுத்தம் செய்துவிட்டு உறங்கச் சென்றாலும் காலையில் எழும்பொழுது சமையலறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை காண்கிறோம். இதற்கு காரணம் சிங்க் தொட்டியில் உள்ள வடிகால் அல்லது அந்த குழாய்களின் தேங்கி இருக்கும் நீர் தான். இந்த பிரச்சனை குறிப்பாக மழைக்காலங்களில் அதிகமாக காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  Interesting Facts: விண்வெளியில் வீரர் இறந்தால் உடலை என்ன செய்வார்கள்? இதுவரை அப்படி நடந்திருக்கா?

35
கைப்பிடி உப்பைக் கொண்டே தீர்வு

இதற்கு ஒரு கைப்பிடி உப்பைக் கொண்டே நம்மால் தீர்வு காண முடியும். இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் சிங் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை சேர்க்கவும். இது சிங்க் துர்நாற்றம் மற்றும் குழாய் அடைப்பிலிருந்து நிவாரணம் தரும் எளிய வழிமுறையாகும். உப்பிற்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையும், அழுக்கை தளர்த்தும் இயற்கையான திறமையும் உள்ளது. இது சிங்க் குழாய்களில் உள்ள பிசுபிசுப்பான அழுக்கை நீக்க உதவும். சமையலறையில் சிங்க் குழாய்களில் எண்ணெய், மசாலாக்கள், சிறிய உணவு துகள்கள், சோப்பு ஆகியவை தினமும் சேர்ந்து நாளடைவில் குழாய்களில் ஒட்டுக்கொண்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:  Train Science: வழுவழுப்பான தண்டவாளத்தில் ரயில் சக்கரம் வழுக்காதது ஏன்? ஆச்சரியமூட்டும் அறிவியல்!

45
தற்காலிக தீர்வைத் தரும்

இரவில் சிங்கை சுத்தம் செய்த பின்னர் ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து விட்டு செல்வது குழாய்களில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும். பிசுபிசுப்பை குறைக்கும். அடப்புகளைச் சரி செய்யும். துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். மேலும் பூச்சிகள், கரப்பான் பூச்சிகளையும் இது கட்டுப்படுத்தும். ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு சுடு தண்ணீர், ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி சமையல் சோடா ஆகியவற்றை கலந்து குழாய்களில் ஊற்றலாம். இது குழாய் அடைபட்டு இருந்தாலோ அல்லது அதிக துர்நாற்றம் வீசினாலோ ஒரு தற்காலிக தீர்வைத் தரும். ஆனால் பெரிய அடைப்பு அல்லது வடிகால் பிரச்சினை இருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்து தராது.

இதையும் படியுங்கள்:  Electricity Bill: ஜீரோ வாட்ஸ் பல்பு எவ்வளவு மின்சாரம் இழுக்கும் தெரியுமா? உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!

55
சிங்க் சுத்தம் பற்றிய முக்கிய குறிப்புகள்

மேலும் சமையலறையில் எண்ணெய் நிறைந்த உணவுகள், பயன்படுத்திய எண்ணெய்களை நேரடியாக சிங்க்கில் கொட்டக் கூடாது. உணவுத் துண்டுகளை குப்பைத் தொட்டியில் போட வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை சுடு தண்ணீர் கொண்டு சிங்கை கழுவ வேண்டும். சிங்க் குழாயில் சிறிய வடிகட்டிகளை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற சிறிய பழக்கங்கள் சமையலறையை சுத்தமாகவும், துர்நாற்றம் இல்லாமலும் வைத்திருக்க உதவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories