Why Hotels Skip Room No 13? : பெரிய ஹோட்டல்களில் 12-ம் நம்பருக்குப் பிறகு நேராக 14-ம் நம்பர் ரூம் அல்லது தளம் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? 13-ம் எண் அங்கே மாயமாகி இருக்கும்! அதன் பின்னணியை பார்க்கலாம்.
உலகெங்கிலும் உள்ள பல ஹோட்டல்கள் வேண்டுமென்றே 13-ம் எண்ணைப் பயன்படுத்துவதில்லை. 12ம் நம்பர் ரூமுக்கு பின்னர் 14ம் நம்பர் ரூம் இருக்கும், அல்லது வேறு ஒரு ரூம் இருக்கும். இது ஏன் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதனை இன்றளவும் பல ஹோட்டல்களில் காணலாம். பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஒருவித பயம்தான் இதற்குக் காரணம்.
24
இதற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் எண் இதுதான்
விருந்தினர்கள் பலர், பயம் காரணமாக 13-ம் நம்பர் அறையில் தங்க விரும்புவதில்லை. இதனால் அந்த ரூம் காலியாகவே இருந்து, ஹோட்டல்களுக்கு நஷ்டம் ஏற்படும். இந்த நஷ்டத்தைத் தவிர்க்க, ஹோட்டல் உரிமையாளர்கள் 13-க்கு பதிலாக 12A, 14 அல்லது 'M' (ஆங்கில எழுத்துக்களில் 13-வது எழுத்து) போன்ற பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்.
34
13-ம் எண் அசுபமானது
அறிவியல் மொழியில், 13-ம் எண்ணின் மீதான இந்த விசித்திரமான பயத்தை 'டிரிஸ்கைடெகாஃபோபியா' (Triskaidekaphobia) என்று சொல்கிறார்கள். அதாவது, 13-ம் எண்ணை ஒரு துரதிர்ஷ்டவசமான அல்லது கெட்ட சகுனமாக கருதுவது. இந்தப் பயம் பல நூற்றாண்டுகள் பழமையான நம்பிக்கைகளோடு தொடர்புடையது.
நார்ஸ் புராணங்களின்படி, ஒரு விருந்துக்கு 13-வதாக வந்த விருந்தாளியால் பெரும் சோகம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, இயேசுவின் கடைசி இரவு விருந்தில் (Last Supper) 13-வதாக இருந்த 'யூதாஸ்' துரோகம் செய்தார். இதனால் இந்த எண் துரதிர்ஷ்டத்தின் அடையாளமானது. ஆனால், சில ஆசிய நாடுகளில் 4 மற்றும் 9 ஆகிய எண்களை ராசியில்லாததாகக் கருதுகிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் இந்த நம்பிக்கைகள் தொடர்வது ஆச்சரியம்தான்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.