Warm Bath : உடற்பயிற்சிக்கு பின் வெந்நீரில் குளிக்கும் நபரா? அப்போ முதல்ல இதை படிங்க

Published : Sep 25, 2025, 12:28 PM IST

உடற்பயிற்சிக்கு பிறகு சூடான நீரில் குளிப்பது நல்லதா? இல்லையா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
15

நம்மில் பலர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு அல்லது ஜிம்மில் இருந்து வந்த பிறகு உடனே குளிக்க தான் விரும்புவோம். அதுவும் சூடான நீரில் தான். உடற்பயிற்சிக்குப் பிறகு சூடான நீரில் குளிக்கும் பழக்கம் நல்லதாக தோன்றினாலும், உண்மையில் அது நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அது ஏன் தெரியுமா? அதற்கான காரணத்தை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25

ஒர்கவுட்டிற்கு பிறகு சூடான நீரில் குளித்தால் உடலில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும்போது உடலானது சூடாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் இருக்கும். மேலும் இரத்த நாளங்களானது உடலை குளிர்விக்க அகலமாக விரிவடையும். இத்தகைய சூழ்நிலையில், சூடான நீரில் குளித்தால் உடலானது மேலும் சூடாகும். இதன் விளைவாக லேசான தலைச் சுற்றல் அல்லது மயக்கம் கூட வரலாம் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போது உங்களுக்கு அதிகமாக வியத்தால், சூடான நீரில் குளிக்கும் போது வியர்வை மேலும் அதிகரிக்கமாகும். இதனால்தான் உடற்பயிற்சிக்கு பிறகு உடனே சூடான நீரில் குளிப்பது நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது.

35

எப்போது குளிக்கலாம்? :  உடற்பயிற்சி செய்த பிறகு நம்முடைய தசைகள் மற்றும் மூட்டுகள் கூலாவதற்கு சிறிது நேரம் தேவைப்படும். எனவே உடற்பயிற்சிக்கு பிறகு உடனே சூடான நீரில் குளிக்காமல் சுமார் 15 முதல் 20 நிமிடங்களாவது காத்திருந்து பிறகு குளிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒர்கவுட் செய்து முடித்த பின்பும், குளிப்பதற்கு முன்பும் இருக்கும் இடைவெளியில் வேண்டுமானால் சிறிதளவு தண்ணீர் குடியுங்கள் மற்றும் ஸ்ட்ரெச்சும் செய்யலாம். இப்படி செய்தால் இதயத்துடிப்பு இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.

45

உடற்பயிற்சிக்கு பிறகு சூடான நீரில் குளிப்பது நன்மைகள் : உடற்பயிற்சிக்கு பிறகு சூடான நீரில் குளித்தால் இறுகியிருக்கும் தசைகளை மென்மையாக்கும் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவும். ஆனால் எப்போது, எந்த நேரத்தில் என்பதை பொறுத்து அதன் நன்மைகளை பெற முடியும்.

55

உடற்பயிற்சிக்கு பிறகு குளிர்ந்த நீரில் குளிக்கலாமா? : உடற்பயிற்சிக்கு பிறகு உடனே புத்துணர்ச்சி பெற சூடநீர் அல்லது குளிர்ந்து நீரில் குளிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். இவை இரண்டுமே உடலை குளிர்விக்கும். தசை மீட்சிக்கும் நன்மை பயக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories