பொதுவாக கிச்சனில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை எதுவென்றால் எறும்புகள் தொல்லை தான். ஆமாங்க, சாதம் கீழே சிந்தி கிடந்தாலோ, சர்க்கரை டப்பாவை சரியாக மூடவில்லை என்றாலோ எறும்புகள் பட்டாளமே படையெடுத்து வந்துவிடும். எறும்புகளை விரட்டியடிக்க சாக்பீஸ் அல்லது எலும்பு பொடியை தான் பயன்படுத்துவோம். ஆனால் இவற்றை பயன்படுத்தினால் மனிதர்களாகிய நம் உயிருக்கு தான் ஆபத்து. ஆகவே இனி அதை பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். அதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு கிச்சனிலிருந்து எறும்புகளை விரட்டி அடிக்கலாம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
27
பிரியாணி இலை மற்றும் உப்பு :
கிச்சனில் இருக்கும் எறும்பை விரட்டி அடிக்க பிரியாணி இலை மற்றும் உப்பு உங்களுக்கு உதவும். இதற்கு பிரியாணி இலையை கைகளால் நன்கு நசுக்கி அதனுடன் உப்பு கலந்து அந்த கலவையை எறும்புகள் வரும் இடங்களில் அதாவது கதவுகள், ஜன்னல் ஓரங்களில் வைத்தால் எறும்புகள் ஓடிவிடும். இனி வரவே வராது.
37
வினிகர்
வீட்டிலிருந்து எறும்புகளை விரட்டியடிக்க வினிகர் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வினிகர் மற்றும் தண்ணீர் சமஅளவு நிரப்பி அதை எறும்புகள் வரும் இடங்களில் ஸ்பிரே செய்யவும். குறிப்பாக எறும்பு பொந்துகள், கிச்சன் மேடை குப்பை கூடை போன்ற இடங்களில் ஸ்பிரே செய்தால், வினிகர் வாசனைக்கு எறும்புகள் வீட்டிலிருந்து ஓடிவிடும்.
மிளகுத்தூள் வாசனை எறும்புகளுக்கு பிடிக்கவே பிடிக்காது. எனவே எறும்புகள் இருக்கும் இடங்கள் அல்லது வரும் இடங்களில் மிளகுத்தூளை தூவி விட்டால் எறும்புகள் ஓடிவிடும். இனி அவை வீட்டில் இருக்காது.
57
காபி தூள்
காபித்தூள் வாசனை எறும்புகளுக்கு பிடிக்காது என்பதால் வீட்டில் இருந்து எறும்புகளை விரட்ட இதை பயன்படுத்தலாம். எனவே காபித்தூளை எறும்புகள் வரும் இடங்களில் தூவி விடுங்கள். இனி உங்கள் வீட்டு பக்கம் எறும்புகள் வரவே வராது.
67
சூடான நீர் :
எறும்பு பொந்தில் சூடான நீரை ஊற்றுங்கள். எறும்புகள் அழிந்து விடும். ஆனாலும் எறும்பு பொந்து ரொம்பவே ஆழமானது என்பதால் சிலவை உயிருடன் இருக்கும். ஆனால் அவையும் பொந்திலிருந்து மீண்டும் வெளியே வரவே வராது.
77
நினைவில் கொள்
வீட்டிற்குள் எறும்புகள் வருவதை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பின்பற்றுங்கள் :
- கிச்சனை எப்போதுமே சுத்தமாக வையுங்கள். குப்பைத்தொட்டியிலிருந்து உடனே குப்பைகளை அகற்றி விடுங்கள்.
- கதவு, ஜன்னல்களில் விரிசல்கள் இருக்கிறதா என்பதை பார்க்கவும்.
- உணவே முறையாக சேமித்து வையுங்கள் சிந்திய உணவுகளை உடனே அகற்றி விடுங்கள்.