Pressure Cooker : சமைக்குறப்ப குக்கர் மக்கர் பண்ணுதா? லூசாக இருக்கும் குக்கர் ரப்பரை இப்படி சரி பண்ணுங்க?

Published : Sep 22, 2025, 05:17 PM IST

உங்க பிரஷர் குக்கர் ரப்பர் லூசாக இருந்தால் எந்தவொரு பணமும் செலவழிக்காமல் அதை எளிய முறையில் சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
16

இந்த காலத்துல பிரஷர் குக்கர் இல்லாத வீடுகளே கிடையாது. அரிசி, பருப்பு, காய்கறிகள் முதல் இறைச்சி வரை சமைப்பதற்கு இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் பிரஷர் குக்கரின் ரப்பர் தளர்வாகி விடும்.

26

பிரஷர் குக்கர் ரப்பர் லூசாக இருந்தால் குக்கர் மூடி சரியாக மூடாது. ஒருவேளை மூடினாலும் விசில் வராது. இதனால் குக்கரில் சமைத்த உணவு மற்றும் தண்ணீர் வெளியே வரும். இதே பிரச்சினையை நீங்களும் சந்திக்கிறீர்களா? அப்படியானால் இது குறித்து கவலைப்பட தேவையில்லை. ஒரு பைசா செலவழிக்காமல் மிக எளிய முறையில் இந்த சிக்கலை சுலபமாக தீர்ந்துவிடலாம். அது எப்படி என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

36

ஃப்ரிட்ஜில் வையுங்கள் : சமைப்பதற்கு முன் குக்கரின் ரப்பரை சுமார் 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வையுங்கள். இப்படி வைத்தால் குளிர்ச்சி காரணமாக அது சுருங்கி, குக்கர் மூடியிலும் எளிதாக பொருந்தும்.

46

மாவு தடவலாம் : மற்றொரு வழி என்னவென்றால், குக்கரின் ரப்பரில் சிறிதளவு உளுந்த மாவு அல்லது தூள் மாவை தடவி குக்கர் மூடியில் பொரித்தினால் எளிதாக பொருந்திக் கொள்ளும். சமைக்கும்போது விசில் சத்தமும் வரும்.

56

ஐஸ் வாட்டர் : ஐஸ் தண்ணீரில் கூட குக்கர் ரப்பரை வைக்கலாம். இது ரப்பரை சுருங்க வைக்கும். இதனால் ரப்பர் குக்கர் மூடியில் நன்றாக பொருந்தும்.

66

ரப்பர் கழுவும் முறை : குக்கர் ரப்பரை சரியாக கழுவவில்லை என்றாலும் சீக்கிரமே லூசாகிவிடும். எனவே ஒவ்வொரு முறையும் குக்கரில் சமைத்த பிறகு அதை நன்றாக கழுவிவிடுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories