மழைக்காலத்தில் உங்கள் வீட்டு கதவு, ஜன்னல் திறக்க முடியாமல் இறுக்கமாக இருக்கிறதா? மிக எளிதாக அதை சரிசெய்துவிடலாம். அது எப்படியென்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மழைக்காலம் வந்தாலே கூடவே பல பிரச்சினைகளும் வரும். அவற்றில் ஒன்றில் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் இறுக்கமாகி மூடுவதற்கும், திறப்பதற்கும் சிரமமாக இருக்கும். சில சமயத்தில், திறக்கும் போது கை, காலில் இடித்துவிடும். இந்த பிரச்சினையை சரிசெய்ய கார்ப்பெண்டர் கிட்ட போக வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே மிக எளிதாக சரி செய்துவிடலாம். அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
26
உப்பு தாள்
இது கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி சிறிதளவு எடுத்து கதவில் எந்த இடத்தில் இறுக்கமாக இருக்கிறதோ அந்தப் பகுதியில் இதைக் கொண்டு நன்றாக தேய்க்கவும். அந்த இடம் சூடாகி அங்கே ஈரப்பதம் குறைய தொடங்கும். பிறகு எப்போதும் போல கதவை திறக்கவும், மூடவும் முடியும்.
36
ஹேர் டிரையர்
மழைக்காலத்தில் கதவு மற்றும் ஜன்னல் திறக்க, மூட சிரமமாக இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் ஹேர் டிரையரை பயன்படுத்தி அதை சரி செய்து விடலாம். இதற்கு கதவு ஜன்னலில் இருப்பதம் உப்பியிருக்கும் பகுதியில் ஹேர் டிரையரை பயன்படுத்தி உலர்த்தவும். இப்படி செய்தால் ஈசியாக கதவு ஜன்னல் மூடும், திறக்கும்.
ஜன்னல் மற்றும் கதவு சரியாக மூட மற்றும் திறக்க முடியாமல் போனால் அதற்கு எளிமையான வழி ஒன்று இருக்கிறது. அதாவது வீட்டில் மீந்து இருக்கும் சோப்புத்தண்டை கொண்டு கதவின் நுனி பகுதியை நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி தேய்க்கும்போது கதவு ஜன்னலை ஈசியாக திறக்க முடியும்.
56
பெயிண்ட்
மழைக்காலத்தில் கதவு ஜன்னல் இறுக்கமாகி மூட முடியாமல் போனால் அந்த பிரச்சனையை சரி செய்வதற்கு பெயிண்ட் அடிப்பது தான் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். எனவே மழைக்காலம் வருவதற்கு முன்பே கதவு ஜன்னல்களில் பெயிண்ட் அடித்து விடுங்கள். இதனால் கதவு ஈரப்பதமாகி இறுகும் பிரச்சனையை தடுத்துவிடலாம்.
66
விளக்கெண்ணெய்
மழைக்காலத்தில் சில சமயங்களில் சாவி போட்டு திறக்கும் துளையில் சாவி மாட்டிக்கொள்ளும். இந்த பிரச்சனை வராமல் இருக்க தினமும் சிறிது விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை துளையின் இடுக்குகளில் தடவி விடுங்கள். இதனால் ஈசியாக சாவி போட்டு கதவை மூடவும், திறக்கவும் முடியும்.