குழந்தைகள் நன்றாக படிப்பது என்பது கடினமாகப் படிப்பது குறித்தது மட்டுமல்ல; புத்திசாலித்தனமாகப் படிப்பதும் தான். குழந்தையின் நலனுக்காக படிப்பு, விளையாட்டு, ஓய்வு ஆகியவற்றில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். குழந்தைகள் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற பின்வரும் டிப்ஸ் போதும்.
25
டைம் டேபிள்!
விளையாடவும், படிக்கவும், ஓய்வு எடுக்கவும் சரியாக நேரம் நிர்ணயித்து பின்பற்ற வையுங்கள். இதனால் குழந்தைகள் நன்றாகச் செயல்படுவார்கள். வெறுமனே படிப்புக்கு மட்டும் நேரம் ஒதுக்கச் சொன்னால் அவர்களுக்கு படிக்கவே ஆர்வம் வராது. ரொம்ப நேரம் படித்தால் சோர்ந்துவிடுவார்கள். விளையாட, அவர்களுக்கு பிடித்த மற்ற செயல்களை செய்யவும்நேரம் ஒதுக்கினால் குழந்தைகளின் கவனம் மேம்படும்.
35
போமோடோரோ டெக்னிக்
இது குறிப்பிட்ட நேரம் படித்துவிட்டு அதைத் தொடர்ந்து இடைவேளைகள் பெறும் குறையாகும். உதாரணமாக 25 நிமிடங்கள் படித்தால் 5 நிமிடம் இடைவேளை. இந்த நுட்பம் குந்தைகளின் கவனத்தை அதிகரித்து, படிக்கும் ஆர்வத்தை தூண்டும். குழந்தைகள் சிறந்த மதிப்பெண்களைப் பெற ரொம்ப நேரம் படிக்க கட்டாயப்படுத்த வேண்டாம். குறுகிய இடைவெளிவிட்டு படிக்க ஊக்குவியுங்கள்.
முழு புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிப்பதை விடவும் சிறு குறிப்புகள் எடுத்து படிப்பது எளிதாக இருக்கும். புரிந்து படிக்க கற்றுகொடுங்கள். ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களாக படித்தால் ஈஸியாக மனதில் பதியும். முக்கிய வார்த்தைகளை வைத்து நினைவில் கொள்வது, சுருக்கமான குறிப்புகள் எடுத்து படிப்பதை போன்றவற்றை செய்ய குழந்தைகளை ஊக்குவித்தால் போதும். நன்றாக படிப்பார்கள். இந்த முறையில் படித்தால் ரொம்ப காலம் நினைவில் இருக்கும். எளிய ஓவியங்கள், மைண்ட் மேப் போன்ற சுருக்கமான காட்சிப்படுத்துதல் நினைவாற்றலையும், புரிதலையும் மேம்படுத்துகிறது.
55
படிக்கும் இடம்
எப்போதும் வீட்டு அறைக்குள்ளே படிக்கவைக்காமல் கொஞ்சம் திறந்தவெளிக்கு அழைத்துச் சென்று படிக்க வையுங்கள். குழந்தை ஒவ்வொரு இடத்திலும் எதை படித்ததோ அதை நினைவில் வைக்க சிறந்தவழியாகும். குழந்தைகளை அருங்காட்சியகங்கள், அறிவியல் கண்காட்சிகள், பூங்கா போன்ற இடங்களுக்கும் கூட்டிச் செல்லுங்கள். பாடப்புத்தக அறிவை தாண்டி நேரடி அனுபவத்தைப் பெறுவது படிப்பில் அவர்களை மேம்படுத்தும்.
குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினால், அவர்களும் உடன் அமர்ந்து படிக்க வேண்டும். அதாவது குழந்தைகள் படிக்க அமரும்போது பெற்றோர் அல்லது குடும்பத்தில் உள்ள நபர்களும் படிக்க வேண்டும். செய்தித்தாள்கள் வேறு ஏதாவது புத்தகங்களை படிக்கலாம். இது குழந்தைகளை மேலும் படிக்க ஊக்கப்படுத்தும் குழந்தைகள் படிக்கும் போது அவர்களுடன் பாடம் தொடர்பாக உரையாடுவது சந்தேகங்களை தீர்ப்பது போன்றவை அவர்களுக்கு படிப்பு மீது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தும்