Bread Omelette for Breakfast : காலை உணவாக பிரட் ஆம்லெட் சாப்பிட்டுறது நல்லதா? தொடர்ந்து சாப்பிடுவறங்க இதை கவனிங்க

Published : Dec 06, 2025, 12:57 PM IST

தினமும் காலை உணவாக பிரட் ஆம்லெட் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா.. இல்லையா? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

PREV
15

இன்றைய வேகமான காலத்தில் காலை உணவு செய்து சாப்பிட நேரமில்லாமல் பெரும்பாலானோர் காலை உணவாக பிரட் ஆம்லெட் தான் சாப்பிடுகின்றனர். ஆனால் காலை உணவாக தினமும் இப்படி பிரட் ஆம்லேட் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. அது குறித்து இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

25

நிபுணர்களின் கூற்றுப்படி, காலை உணவு பிரெட் ஆம்லெட் சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கமாகும். ஏனெனில் பிரெட் ஆம்லெட்டில் தேவையான அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தவிர அவை புரத தேவையையும் பூர்த்தி செய்கின்றன.

35

எப்படியெனில் முட்டையில் ஏற்கனவே புரதச்சத்து நிறைந்துள்ளன. கூடவே அமினோ அமிலங்கள், வைட்டமின் பி போன்றவையும் இருக்கிறது. ஆனாலும், பிரட்டின் தரம் தான் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும்.

45

அதாவது, நீங்கள் வெள்ளை பிரட் பயன்படுத்தினால் அதில் நார்ச்சத்து குறைவாகவே இருக்கிறது. இதனால் செரிமானத்தை மெதுவாக்கும். மேலும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் மற்றும் சீக்கிரமாகவே பசியை தூண்டும். எனவே வெள்ளை பிரட்டுக்கு பதிலாக கோதுமை பிரெட் பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. ஏனெனில் அது வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுபோல முழு தானியங்களும் பயன்படுத்துவதும் நல்லது.

55

நீங்கள் பிரட் ஆம்லெட் தயாரிக்கும் போது குறைவான பட்டர் அல்லது எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. அவற்றை அதிகமாக பயன்படுத்தினால் கலோரிகளை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் ரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்க செய்யும். மேலும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை பிரட் ஆம்லெட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு : பிரட் ஆம்லெட் சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் நிச்சய நல்ல பலன்களை பெறுவீர்கள். குறிப்பாக எந்த பிரெட் மற்றும் எந்த எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும்.

Read more Photos on
click me!

Recommended Stories