வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் :
வெங்காயத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகின்றது. அதிலும் குறிப்பாக வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்குகின்றது. முக்கியமாக தினமும் ஒரு பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பிக்கும். மேலும் வெங்காயம் கேன்சர் அபாயத்தையும் குறைக்கும் என ஆராய்ச்சி சொல்லுகின்றது.
ஒரு கப் வெங்காய ஜூஸ் எண்ணற்ற மருத்துவ பலன்களை நமக்கு வாரி வழங்குகிறது. அதாவது, வெங்காய ஜூஸ் புற்று நோயை குணப்படுத்தும், உடலில் குளுக்கோஸ் அளவை குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அலர்ஜிக்கு எதிராக போராடும், சுவாச கோளாறு பிரச்சனைகளை நீக்கும், பார்வைக் கோளாறு பிரச்சினையை போக்கும், நகச்சுத்துக்கு ரொம்பவே நல்லது, மன அழுத்தத்திற்கு எதிராக போராடும், நல்ல தூக்கத்திற்கு உதவும், கருவுறுதலுக்கு வழிவகுக்கும், முகப்பரு பிரச்சனையை போக்கும், முகச்சுருக்கத்தை நீக்கும் மற்றும் முடியும் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.