பாப்கார்னில் அடங்கியுள்ளவை:
ஒரு கப் பாப்கார்னில் 30 கலோரிகள் உள்ளன. இதில் கொழுப்பு 0.5 கிராம், நார்ச்சத்தும், புரதமும் 1 கிராம் உள்ளன. கார்போஹைட்ரேட் 6 கி, உப்பு 1 மிகி, பொட்டாசியம் 70 மிகி உள்ளது. மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் வைட்டமின் பி6 10%, மாங்கனீசு 10% உள்ளது. இதில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் உள்ளன.
ஆரோக்கிய நன்மைகள்:
பாப்கார்ன் முழு தானியமான சோளத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. நாம் உண்ணும் சில பழங்கள், காய்கறிகளை விட பாப்கார்னில் அதிகளவு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுகிறது.
தானியங்களில் உள்ள பசையத்தை சிலரால் ஜீரணிக்க முடியாது. அவர்கள் கூட பாப்கார்ன் உண்ணலாம். எளிதில் செரிமானம் அடையும். செலியாக் நோய் இருப்பவர்களும் பாப்கார்ன் உண்ணலாம்.
எடையை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிடத் தகுந்த ஸ்நாக் பாப்கார்ன். குறைந்த கலோரியுள்ள நொறுக்குத்தீனி பாப்கார்ன்.