19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சிறுவாபுரி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

First Published Aug 21, 2022, 1:18 PM IST

டமுழுக்கு விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு சிறுவாபுரி விழாக்கோலம் பூண்டது.

immersion ceremony at siruvapuri murugan temple

சிறுவாபுரி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா 19 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே சின்னப்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது.

immersion ceremony at siruvapuri murugan temple

பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 19 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...Budhan Peyarchi 2022: இன்று நிகழும் புதன் பெயர்ச்சி...இந்த ராசிக்காரர்களுக்கு தலைவிதி மாறும், ஒளி பிறக்கும்..

immersion ceremony at siruvapuri murugan temple

இதற்காக ஒரு கோடி செலவில் புனரமைப்பு பணிகள் முன்னதாக மேற்கொள்ளப்பட்டன. இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழா அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. மந்திரங்கள் மேளதாள ஓசையுடன் துவங்கியது.

மேலும் செய்திகளுக்கு... Sukran Peyarchi: ஆகஸ்ட் 31ல் சுக்கிரன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு கோடீஸ்வரர் யோகம் உண்டு, உங்கள் ராசி இதுவா

immersion ceremony at siruvapuri murugan temple

குடமுழுக்கு விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு சிறுவாபுரி விழாக்கோலம் பூண்டது. காவல்துறையினர் மற்றும் கோவில் விழா குழுவினர்முன்னிருந்து நடத்தியிருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...Budhan Peyarchi 2022: புதன் பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு இன்னும் 24 மணி நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும்..

click me!