Madras Day 2022: சிங்கார சென்னை முதன் முதலில் எப்படி தோன்றியது தெரியுமா.? பிரமிக்க வைக்கும் மெட்ராஸ் வரலாறு..

First Published Aug 21, 2022, 9:35 AM IST

Madras Day 2022: எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழகத்தின் தலைநகரம், சிங்கார சென்னை தின கொண்டாட்டத்தில் அதன் வரலாற்று சிறப்புகளை பற்றி தெரிந்து வைத்து கொள்வோம். 

Madras Day 2022:

தமிழகத்தின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் என்பதை விட, உலகில் உள்ள தமிழர்களின் முக்கிய பயன்பாட்டு நகரம் என்று சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும். கடந்த சில மாதங்களாக ஒலிம்பிய செஸ் மற்றும் பல்வேறு சுவர் சித்திரங்களின் மூலம் சென்னை மாநரகம் வெளிநாட்டு, சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வந்தாரை வாழ வைக்கும், சென்னை  இன்று வரை சுமார் சுமார் 10 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்றாக திகழ்கிறது. கிராமபுறங்களில், எல்லாம் வாழ்வில் ஒரு முறையாவது சென்னை செல்ல வேண்டும், என்பது பலரில் வாழ்நாள் லட்சியமாக உள்ளது. 

மேலும் படிக்க...World Photography Day 2022: ஒரு செல்ஃபி எடுக்கலாமா? உலக புகைப்பட தினம்...இதன் வரலாற்று முக்கியத்துவம் என்ன..?

Madras Day 2022:

இன்று  மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் பாதைகள், அருங்காட்சியகம், நூலகம், மெரினா பீச், கோவில் மற்றும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம் என பலவற்றில் சிறந்த நவீன நகரமாகக் காட்சியளிக்கும் சென்னை மாநகரம், தோன்றி  இன்றுடன் 382 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. ஆம், தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் கி.பி 1639ம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஆகும். 

Madras Day 2022:

இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்  'பிரான்ஸிஸ் டே' என்ற கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்ட் ஆவார். அதாவது இந்தியாவில் வணிகம் செய்வதற்காக கடந்த  17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வந்துள்ளனர். அப்போது, பிரான்ஸிஸ் டே என்ற ஆங்கிலேயர் சோழ மண்டல கடற்கரையில் அதாவது தற்போது தலைமை செயலகம் அமைந்து இருக்கும் இடத்தில் கொஞ்சம் நிலத்தை வாங்கினார். அந்த நிலத்தில், ஆங்கிலயேர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியுள்ளனர். 

மேலும் படிக்க...World Photography Day 2022: ஒரு செல்ஃபி எடுக்கலாமா? உலக புகைப்பட தினம்...இதன் வரலாற்று முக்கியத்துவம் என்ன..?

Madras Day 2022:

இதையடுத்து, அந்த இடத்தைச் சுற்றி மெல்ல குடியிருப்புகள் உருவாகவே சென்னைப் பட்டணம் உருவாகத் துவங்கியது. மேலும், சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்களும் இத்துடன் இணைந்தன. ஆனாலும் கூட,1996 க்கு முன் சென்னையின் அதிகாரப்பூர்வ பெயராக 'மெட்ராஸ்' என்றே இருந்து வந்தது. கடந்த 1969ம் ஆண்டு தமிழக முதல்வராக அண்ணாதுரை இருந்தபோது மெட்ராஸ் மாகாணம் என்பதை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்தார்.

Madras Day 2022:

இதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கடந்த 1996ம் ஆண்டு ஜூலை 17 அன்று தான் ''சென்னை'' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி Chennai turns 383, celebrations,  Elliots beachகொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சிங்கார சென்னை திட்டம் கொண்டு வரப்பட்பட்டது.

மேலும் படிக்க...World Photography Day 2022: ஒரு செல்ஃபி எடுக்கலாமா? உலக புகைப்பட தினம்...இதன் வரலாற்று முக்கியத்துவம் என்ன..?

Madras Day 2022:

இதனால், சென்னையின் புகழ் பட்டி தொட்டியெங்கும் பரவ இந்தியாவில் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வாழ்வாதாரம் தேடி இங்கு வசித்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இன்றைக்கு உலகத்தில் இருக்கின்ற 195 நாடுளில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் சென்னையில் வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.  

click me!