
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் நடைபயிற்சி பெரிதும் உதவுகிறது. நாள்தோறும் சில நிமிடங்கள் வாக்கிங் சென்றாலே உங்களுடைய மன ஆரோக்கியம் மேம்படும். இதயமும் வலுப்பெறும். ஒருவர் தினமும் நடைபயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தால் அவர் நாள்பட்ட நோய்களிலிருந்து தன்னை காத்துக் கொள்கிறார்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள், இதயப் பிரச்சனை இருப்பவர்கள் என அனைவருக்கும் நடைபயிற்சி சிறந்த பயிற்சியாக இருக்கும். ஒருவரின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான தேவையே நல்ல தூக்கம் தான். தினமும் நடந்தால் ஆழ்ந்த தூக்கம் எளிதில் வசப்படும். இந்த பதிவில் வாக்கு செல்வது உங்களுடைய மூளைக்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை காணலாம்.
மூளை ஆரோக்கியம்:
நாள்தோறும் கொஞ்ச நேரம் நடப்பது மூளையை நன்றாக செயல்பட தூண்டுவதாக ஸ்டான்போர்ட் ஆராய்ச்சி கூறுகிறது. மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க நடைபயிற்சி உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாள்தோறும் நடப்பவர்களுடைய படைப்பாற்றல் அதிகரிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் நீங்கள் நடக்கும் போது உங்களுடைய மூளை சுறுசுறுப்பாக இருப்பதோடு மட்டுமின்றி ஆக்கப்பூர்வமாகவும் சிந்திக்கிறது. இந்த பலன்களை பெற மணிக்கணக்காக நடக்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. 10 முதல் 15 நிமிடங்களில் சுறுசுறுப்பாக சிறிய தூரத்தை கடந்தால் கூட நல்ல பலன்கள் கிடைக்கும்.
இதையும் படிங்க: வெறும் '6' நிமிட வாக்கிங் போதும்.. உங்க உடம்ப பத்தி ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!!
எடை குறைக்க!
நீங்கள் எடையை கட்டுக்குள் வைக்க விரும்பினால் நாள்தோறும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் எவ்வளவு வேகமாக நடக்கிறீர்களோ அதற்கேற்றபடி கலோரிகள் கரைய தொடங்கும். விறுவிறுப்பாக நடக்கும் போது தான் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. உங்களுடைய செரிமானம் துரிதமாகிறது. வாயு, வயிறு உப்புசம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நடைபயிற்சி உதவியாக உள்ளது.
இதையும் படிங்க: தினமும் வெறுங்காலுடன் நடந்தால் என்னாகும்? வாக்கிங் போறவங்க அறியாத தகவல்!!
சாப்பிட்ட பின் குறுநடை:
நீங்கள் நாள்தோறும் சாப்பிட்ட பின்னர் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் நடந்தால் செரிமானம் மேம்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். உணவிற்கு பின்னர் 15 நிமிடங்கள் மிதமான வேகத்தில் நடந்து செல்வது உங்களுடைய தசைகள் குளுக்கோஸை உறிஞ்ச உதவியாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் இந்த முறையை பின்பற்றுவது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்ல பலனளிக்கும். சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகள் தினமும் சாப்பிட்டபின் நடத்துற பழக்கப்படுத்த வேண்டும். நடைபயிற்சி செய்வது உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையை குறைப்பதோடு, ஆற்றலையும் அதிகரிக்கும்.