
வேப்ப இலை பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏராளமான மருத்துவ குணங்களை வேப்பயிலை கொண்டுள்ளது. இது பல உடல்நிலை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் வேப்பயிலை இன்றும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. சின்ன குழந்தைகளை குளிப்பாட்டும் போது அந்த தண்ணீரில் வேப்பம் பூவைப் போட்டு குளிப்பாட்டுவதே நீங்கள் பார்த்திருப்பீர்கள். காரணம் அது பல நோய்கள் மற்றும் தொற்றுக்களை தடுக்கும். நீங்கள் குளிக்கும் நீரில் வேப்பிலை போட்டு குளித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தொற்றுகளை விரட்டும்:
வேப்ப இலையை ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இவை நம் சருமத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் தொற்றுக்களை விரட்ட உதவுகிறது. முக்கியமாக குளிக்கும் தண்ணீரில் வேப்ப இலையை போட்டு குளித்து வந்தால் முகப் பருக்கள் வரவே வராது. இது தவிர சரும பிரச்சனைகளும் வராது.
சரும வறட்சியை போக்கும்:
வேப்ப இலையை குளிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து பிறகு அந்த நீரில் குளித்து வந்தால் சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவே இருக்கும். குறிப்பாக சரும வறட்சி வராது.
இதையும் படிங்க: குளிர்காலத்திலும் குளிர் நீரில் குளிக்கும் பழக்கம்; அதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா?
உடல் துர்நாற்றம் குறைக்கும்:
பலருக்கு வியர்வை காரணமாக உடலில் துர்நாற்றம் வீச தொடங்கும் . எனவே துர்நாற்றத்தை போக்க குளிக்கும் நீரில் வேப்ப இலையை போட்டு குளித்து வந்தால் உடலில் வியர்வை நாற்றம் அடிக்காது. வேப்ப இலை துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவும். மேலும் அதில் துர்நாற்றத்தை போக்கும் பண்புகள் உள்ளன.
முகப்பரு பிரச்சனையை குறைக்கும்:
நீங்கள் முகப்பரு பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால், தினமும் குளிக்கும் தண்ணீரில் வேப்ப இலை போட்டு குளித்து வந்தால் முகப்பருக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
சரும அலர்ஜியை போக்கும்:
குளிக்கும் தண்ணீரில் வேப்ப இலை போட்டு குளித்து வந்தால் சரும அலர்ஜி, தடுப்புகள், அரிப்பு போன்ற சரும பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும். இவை மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.
பொடுகு பிரச்சனை நீங்கும்:
உங்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தால் குளிக்கும் நீரில் வேப்ப இலை போட்டு குளித்து வந்தால் பொடுகு பிரச்சனை பெரும்பாலும் குறையும். வேப்ப இலை உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுக்களை நீக்குவதில் திறம்பட செயல்படுகிறது. அதுமட்டுமின்றி வேப்ப இலை தண்ணீரில் குளித்து வந்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.
கண் அலர்ஜியை நீக்கும்:
வேப்ப இலையை குளிக்கும் தண்ணீரில் போட்டு குளித்து வந்தால் கண் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இந்த நீர் பருவகால கண் அலர்ஜியை நீக்கும். காற்று மாசுபாடு நம் கண்களை பாதிக்கும் இதனால் கண்களில் எரிச்சல் ஏற்படும் எனவே இவற்றை போக்க நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் வேப்ப இலை நீரில் குளிப்பது தான்.
இதையும் படிங்க: வேப்பிலைக்கு சர்க்கரை நோயை விரட்டும் தன்மை உண்டா?