
முகப்பரு என்பது இன்று பலரையும் தொந்தரவு சொய்யும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை. இதற்கு ஆண் பெண் என்ற வேறுபாடில்லை. முகப்பரு வருவதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மோசமான உணவுப் பழக்கங்கள் தான். முகப்பரு ஒருவரது அழகை கெடுத்து விடுகிறது. முகத்தில் இருக்கும் பருக்களை மறைக்க மேக்கப் போட்டால் கூட அவைகள் மறையாது.
சிலர் முகத்தில் பருக்கள் வந்தால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பார்கள். நீங்களும் இதே நிலையில் தான் இருக்கிறீர்களா? என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களுக்காக சில வீட்டு குறிப்புகளை பற்றி இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் தவறாமல் பின்பற்றி வந்தால் சில நாட்களிலே நீங்கள் சிறந்த முடிவுகளை பெறாமல். அது என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் முகப்பரு ரொம்ப வருதா? இந்த '1' பொருள் முகத்தை பளிச்னு மாத்திடும்
கிரீன் டீ:
கிரீன் டீ உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமின்றி முகப்பருக்களையும் போக்குவதற்கும் உதவுகிறது. இதில் டானின்கள், ஃபிளாவனாய்டுகள் உள்ளது. இவை பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்புகளை போராட உதவுகின்றது. மேலும் கிரீன் டீயில் வைட்டமின் ஈயும் உள்ளது. இது சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், ஹைட்ரேட் செய்யவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி கிரீன் டீ உங்களது சருமத்தை ஈரப்பதமாக்குவது மட்டுமின்றி, பளபளப்பாக வைக்க உதவுகிறது. மேலும் சூரிய ஒளியால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களை நீக்க இது பெரிதும் உதவுகின்றது.
இதையும் படிங்க: உங்க முகத்துல இந்த இடத்தில பருக்கள் வந்தால் அசால்டா இருக்காதீங்க.. உடலில் இந்த உறுப்பு டேமேஜ்னு அர்த்தம்..
கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல் சருமப் பிரச்சனைகளுக்கு சிறந்த தேர்வாகும். கற்றாழை வீக்கத்தை குறைக்கவும், முகத்தில் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடவும் பெரிதும் உதவுகின்றது. எனவே கற்றாழையை முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.
தேயிலை மர எண்ணெய்:
தேயிலை மர எண்ணெய் முகத்தில் இருக்கும் பருக்களை எதிர்த்து போராடுவதற்கு சிறந்த தேர்வாகும். இது முகத்தில் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவும், வீக்கத்தை குறைக்கவும் திறனை கொண்டுள்ளது.
ரோஸ் வாட்டர்:
அழகு சாதன பொருட்களில் ரோஸ் வாட்டர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ரோஸ் வாட்டர் நிறத்தை மேம்படுத்தவும், தோல் சிவப்பை குறைக்கவும் பயன்படுகிறது. முக்கியமாக இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை முகத்தில் பருக்கள் வருவதை குறைக்க உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் வீக்கம் மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் வருவதை குறைக்கின்றது.
முட்டை:
முட்டையில் நிறைய ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால், இது முகத்தில் பருக்கள் வருவதை தடுக்க உதவுகின்றது. மேலும் இது முகத்தை பளபளப்பாக வைக்கவும் உதவுகின்றது. இதற்கு நீங்கள் முட்டையின் வெள்ளை கருவை தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அதுதான் சருமத்தை இறுக்கமாக்கி, முகத்தில் நெகிழ்ச்சி தன்மையை அதிகரிக்க செய்யும். மேலும் வெள்ளை கரு முகத்தில் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.