குழந்தைகளிடம் கத்தாதீர்கள்:
உங்கள் குழந்தை வீட்டுப்பாடம் செய்யவில்லை, ஒழுங்காக படிக்கவில்லை, சொல்பேச்சை கேட்க மாட்டேங்குது என்றெல்லாம் இருந்தால் அவர்களிடம் ஒருபோதும் கத்தாதீர்கள். இதனால் உங்கள் குழந்தை உங்களை விட்டு தூரமாக விலகி விடலாம். மேலும் அவர்கள் தாங்கள் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்வார்கள்.
குழந்தைகளை ஒருபோதும் அடிக்காதீர்கள்:
பெற்றோரே நீங்கள் எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி, எரிச்சலாக இருந்தாலும் சரி எக்காரணம் கொண்டும் உங்கள் குழந்தையை ஒருபோதும் அடிக்க வேண்டாம். நீங்கள் உங்கள் குழந்தை அடித்தால் அவர்களுக்கு உங்கள் மீது பயம் ஏற்படும். இதன் காரணமாக அவர்கள் உங்களிடமிருந்து தூரமாக விலகி விடுவார்கள். இவை எல்லாவற்றையும் விட உங்கள் குழந்தை கோழையாக மாறிவிடுவார்கள்.