
இன்றைய காலகட்டத்தில் ரத்த அழுத்தம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. இதற்கு காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் தான். இது தவிர, புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்றவையும் இதற்கு முக்கிய காரணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். இல்லையெனில் சில சமயங்களில் இதயம் தொடர்பான பிரச்சனைகள் பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படலாம்.
இத்தகைய சூழ்நிலையில், ரத்த அழுத்தம் குளிர்காலத்தில் அதிகரிப்பதாக பலர் சொல்லுகின்றனர் . ஏனெனில் இந்த பருவத்தில் நமது ரத்த நாளங்கள் சுருங்குகின்றது. இது தவிர நாம் எந்தவிதமான உடல் செயல்பாடுகளையும் செய்வதை நிறுத்தி விடுகிறோம். குளிர்காலத்தில் நம்முடைய வாழ்க்கை முறையில் நிறைய மாற்றம் ஏற்படுவதால், இந்த பருவத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: அளவு முக்கியம்!! பிபி அதிகம் இருக்கவங்க 'அரிசி' சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க சில எளிய வழிமுறைகளை மட்டும் நீங்கள் பின்பற்றினால் போதும் அவை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: ரத்த அழுத்தம் எவ்வளவு இருந்தால் நார்மல்? எந்த அளவு ஆபத்தானது?
வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள்:
குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க நீங்கள் விரும்பினால், தினசரி உடற்பயிற்சியை செய்யுங்கள். நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் உங்களது ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதற்கு நீங்கள் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே உங்களால் முடிந்த சிறிய உடற்பயிற்சியை செய்யுங்கள். அதாவது நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்வதன் மூலம் நீங்கள் நிறைய நன்மைகளை பெறுவீர்கள்.
ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள்:
குளிர்காலத்தில் உங்களது உணவை சரியாக கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. இதற்கு அதிக சோடியம் உள்ள உணவுகளை நீங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதுபோல குளிர் காலத்தில் அதிகப்படியான உப்பு எடுத்துக் கொள்வது தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வாழைப்பழம், ஆரஞ்சு பழம், கீரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
நீரேற்றமாக இருங்கள்:
இந்த குளிர்காலத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். எனவே தண்ணீர் குடிப்பது ஒருபோதும் புறக்கணிக்க வேண்டாம். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், ரத்த அழுத்தம் பெரிய அளவிற்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க முயற்சி செய்யுங்கள்.
மன அழுத்தத்தை தவிர்க்கவும்:
குளிர்காலத்தில் ரத்த அழுத்தத்தை தவிர்க்க உங்களால் முடிந்தவரை மன அழுத்தத்தை இருப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது ரத்த அழுத்தம் பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கூடுதலாக இதயத்துடிப்பும் அதிகரிக்கும். எனவே மன அழுத்தத்தை நீங்கள் குறைக்க விரும்பினால் தினமும் தியான மற்றும் யோகா செய்யுங்கள்.