தற்போது கேஸ் அடுப்பு இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது. எல்லாருடைய வீட்டிலும் கண்டிப்பாக கேஸ் அடுப்பு இருக்கும். மேலும் கேஸ் அடுப்பு இல்லத்தரசிகளின் நண்பன். ஏனெனில் இது அவர்களது வேலையை மிகவும் எளிதாகிறது என்பதால் தான். வீட்டை நாம் எவ்வளவு சுத்தமாக வைக்கிறோமோ அதுபோல கேஸ் அடுப்பையும் சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் அதில் தினமும் உணவு சமைக்கப்படுகிறது. மேலும் ஒரு சிலர் இரவு தூங்குவதற்கு முன் கேஸ் அடுப்பை சுத்தம் செய்வதே பழக்கமாக்கி உள்ளனர்.
24
Cleaning gas stove burners in tamil
அந்த வகையில் பெரும்பாலான இல்லத்தரசிகள் கேஸ் அடுப்பை சுத்தம் செய்யும் போது ஒரு விஷயத்தை மட்டும் சுத்தம் செய்ய மறந்து விடுகிறார்கள். அது வேற ஏதும் இல்லைங்க கேஸ் பர்னர் தான். சொல்லப்போனால், கேஸ் பர்னர் தான் கேஸ் அடுப்புக்கு ரொம்பவே முக்கியமானது. மேலும் நாம் சமைக்கும் உணவு பலமுறை வெளியில் சிந்தி கேஸ் பர்னர் மீது விழுந்து, அதன் ஓட்டைகளில் குவிந்து விடும். இதனால் பர்னரில் தீ மெதுவாக எரியும், சில சமயங்களில் முழுவதுமாக அணைந்து விடும். அதுமட்டுமின்றி, கேஸ் பர்னரை ஒழுங்காக சுத்தம் செய்ய விட்டால் அது பிசுபிசுப்பாக இருப்பது மட்டுமின்றி, அதை கழுவுவதற்கும் சிரமமாகவும் இருக்கும்.
மேலும் கேஸ் பர்னரை சுத்தம் செய்வதற்கு கடினம் என்று சிலர் பழுதடைந்த கேஸ் பர்னரை குப்பையில் போட்டுவிட்டு, புதியதாக வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் பணம் வீணாணது தான் மிச்சம். இத்தகைய சூழ்நிலையில், உங்களது பணம் ஏதும் வீணாகாமல் வீட்டிலேயே கேஸ் பர்னரை மிக எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை உங்கள் பர்னர் மீது நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு சூடான நீரில் போட்டு அப்படியே ஊற வைத்துவிட்டு பிறகு கழுவினால் பர்னர் புதுசாக மாறிவிடும்.
வினிகர்:
வினிகரில் சுமார் அரை மணி நேரம் பர்னரை ஊறவைத்து பிறகு வேண்டாத டூத் பிரஷ் அல்லது ஸ்க்ரப் கொண்டு நன்றாக தேய்த்தால் பர்னரில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். பார்ப்பதற்கு புதுசு போல இருக்கும்.