
பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்க பல நூற்றாண்டுகளாக பல்வேறு நுட்பங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் அக்கு பிரஷர். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீனாவில் தான் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு குணப்படுத்தும் கலையாகும். அதாவது நம்முடைய உள்ளங்கையில் சில குறிப்பிட்ட இடங்களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் இதை பழக்கமாக்கி உள்ளனர் இதனால் அவர்களுடைய ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இவை அக்கு பாய்ண்ட்ஸ் என்றும், அழுத்த புள்ளிகள் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த புள்ளிகள் தான் உடலின் ரகசிய பொத்தான் போல செயல்படுகின்றது தெரியுமா?
ரிஃப்ளெக்சாலஜி, மசாஜ் நுட்பங்கள் பற்றி தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக இந்த அழுத்த புள்ளிகள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த புள்ளிகளில் அழுத்தம் அழுத்தம் கொடுப்பதன் மூலம் சில உடல் நல்ல பிரச்சனைகளை எதிர்த்து போராட முடியும். இது மிகவும் எளிமையான செயல்முறை என்பதால், ஒரு நாளைக்கு சுமார் 2 நிமிடங்கள் மட்டும் செய்தால் போதும். இப்போது இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: கைகளில் தோல் உரியக் காரணம் இதுதான்.. உடனடி தீர்வு இதோ!
உள்ளங்கையில் அழுத்தம் கொடுப்பதால் என்ன?
உங்களது உள்ள கையில் அழுத்தம் கொடுத்தால் உங்களது முழு உடலும் தூண்டப்படும். அதாவது நீங்கள் சரியான நுட்பத்தை பின்பற்றி இதை செய்தால் உங்களது முழு உடலுக்கும் கூடுதலான ஆற்றல் கிடைக்கும் தெரியுமா? ஆம், உள்ளங்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் உங்களது உள் உறுப்புகள் அனைத்தும் தூண்டப்பட்டு, சோர்வு நீங்கும். இது தவிர, உங்களது உடலானது பாக்டீரியாவை எதிர்த்து போராடுவதற்கான ஆற்றலைப் பெறும். உங்களது உள்ளங்கையில் இருக்கும் புள்ளிகள் முழு உடலையும் தூண்டுவதால் பெரும்பாலான ஒரியண்டல் மருத்துவத்தில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது இப்போது அதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உள்ளங்கையில் அழுத்தம் கொடுப்பது எப்படி?
முதலில் உங்கள் உள்ளங்கையின் மையப் பகுதியில் இருக்கும் சின்ன பள்ளத்தில் மறு கையின் கட்டை விரலை வைத்து வட்டமாக அழுத்தவும் அல்லது மசாஜ் செய்யவும். இதை நீங்கள் நன்கு அழுத்தமாக செய்யலாம். ஆனால், வலியை ஏற்படுத்தும் அளவிற்கு செய்யக் கூடாது. இப்படி நீங்கள் தினமும் ஒரு நாளைக்கு சுமார் 2 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
இதையும் படிங்க: உள்ளங்கையில் இந்த அதிர்ஷ்ட அடையாளங்கள் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
உள்ளங்கையில் மசாஜ் செய்வதன் நன்மைகள்:
- உள்ளங்கையில் நீங்கள் மசாஜ் செய்வது வந்தால் உங்களது முழு உடலும் தூண்டப்படுவது மட்டுமின்றி, முழு உடலுக்கும் ஆற்றல் கிடைக்கின்றது இதனால் தொற்று நோய்களை எதிர்த்து சுலபமாக போராடலாம்.
- மேலும் உள்ளங்கையில் மசாஜ் செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கும், ஒற்றைத் தலைவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, பல் வலி போன்ற வலிகளும் குறையும்.
குறிப்பு : உள்ளங்கையில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு எந்தவிதமான எதிர்மறையான விளைவுகளும் ஏற்படாது. உதாரணமாக நீங்கள் மருந்துகளை சாப்பிடும்போது கூட பக்கவிளைவுகள் ஏற்படும். ஏனெனில் இது முற்றிலும் இயற்கையானது என்பதால்தான்.