காலையில பால் டீயா குடிக்குறீங்க? அட! இந்த மூலிகை டீ குடிங்க.. எடை சர்ருனு குறையும்!!

Published : Jan 08, 2025, 09:48 AM ISTUpdated : Jan 08, 2025, 09:52 AM IST

Herbal Tea For Weight Loss : எந்த முயற்சியும் இல்லாமல் உங்களது எடையை சுலபமாக குறைக்க விரும்பினால் உங்களுக்காக சில மூலிகை டீகளைப் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது. அவற்றை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்களது எடை விரைவில் குறையும்.

PREV
15
காலையில பால் டீயா குடிக்குறீங்க? அட! இந்த மூலிகை டீ குடிங்க.. எடை சர்ருனு குறையும்!!
weight loss tips in tamil

தற்போது உடல் பருமன் பிரச்சனைகள் பலரும் அவதிப்படுகிறார்கள். அவர்கள் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். ஜிம்மிற்கு செல்வது முதல் உணவு கட்டுப்பாடு வரை என அனைத்தையும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். அதிலும் சிலரது வாழ்க்கை முறை ரொம்பவே பிஸியாக இருந்தால், அவர்கள் ஜிம்மிற்கு செல்லவோ யோகா செய்யவோ அல்லது சிறப்பு உணவு முறையை கடைப்பிடிக்கவோ அவர்களுக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை. இந்த லிஸ்டில் நீங்களும் இருக்கிறீர்கள் என்றால், அதிக முயற்சி இல்லாமல் உங்களது எடையை சுலபமாக குறைத்து விடலாம்  என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிலவற்றை நீங்கள் பின்பற்றினால் போதும், உங்களது அதிகரித்த எடையை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.

25
morning herbal teas for weight loss in tamil

இன்று மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகள் உடல் எடை குறைப்பது பெரும் சவாலானது என்று சொல்லலாம். எனவே உங்களுக்காக ஒரு சுலபமான வழியை தான் இந்த பதிவில் கொண்டு வந்துள்ளோம். அது வேற ஏதும் இல்லைங்க மூலிகைக்கு தான். தினமும் காலை எழுந்தவுடன்  நீங்கள் பால் டீ குடிப்பதற்கு பதிலாக கீழே சொல்லப்பட்டுள்ள சில மூலிகை டீயை குடித்து வந்தால் உங்களது உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட சில மூலிகை டீக்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

35
Herbal teas for weight loss in tamil

இலவங்கப்பட்டை டீ:

உடல் எடையை குறைப்பதற்கு இலவங்கப்பட்டை டீ குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இலவங்கப்பட்டையில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. எனவே இதில் டீ தயாரித்து குடித்தால் அது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இலவங்கப்பட்டை டீ தயாரிக்க முதலில், 1 கப் தண்ணீர், 1 ஸ்பூன் தேன், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் 1 துண்டு இலவங்கப்பட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதில் இலவங்கப்பட்டை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கவும். இதை தினமும் குடித்து வந்தால் உங்களது உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிங்க: உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்கள் இதை சாப்பிட்டால்; ஈஸியா தொப்பையை குறைக்கலாம்!

45
Weight loss tea in tamil

சீரக டீ:

சீரக டீ எடையை குறைக்க உதவும். சொல்லப்போனால் இது காலை டீக்கான ஆரோக்கியமான விருப்பமாகும். இதை தயாரிக்க 1 கப் தண்ணீரில், 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அடுப்பின் மீது வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக குறைந்தவுடன் அதை வடிகட்டி அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து குடிக்கலாம். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் உங்களது எடை விரைவில் குறையும்.

பிளாக் டீ:

தினமும் காலை பிளாக் டீ குடித்து வந்தால் உடல் எடையை குறைத்து விடலாம். ஏனெனில் பிளாக் டீ வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன், எடையையும் குறைக்கும். பிளாக் டீயை வழக்கமான முறையில் தயாரிக்கலாம். அதாவது, அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் மற்றும் தேயிலை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி அதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.

55
herbal teas benefits in tamil

கிரீன் டீ:

கிரீன் டீ உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது. கிரீன் டீ யை தயாரிப்பது ரொம்பவே சுலபமானது. அதுமட்டுமின்றி இந்த டீயை நீங்கள் காலை, மாலை என இருவேளை குடிக்கலாம். கிரீன் டீ வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றைத் தவிர பெருஞ்சீரகம் டீ, பெப்பர்மின்ட் டீ, இஞ்சி டீ போன்றவற்றையும் குடித்தாலும் உடல் எடை குறையும்.

இதையும் படிங்க:  உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க!

Read more Photos on
click me!

Recommended Stories