- Home
- Gallery
- உங்க முகத்துல இந்த இடத்தில பருக்கள் வந்தால் அசால்டா இருக்காதீங்க.. உடலில் இந்த உறுப்பு டேமேஜ்னு அர்த்தம்..
உங்க முகத்துல இந்த இடத்தில பருக்கள் வந்தால் அசால்டா இருக்காதீங்க.. உடலில் இந்த உறுப்பு டேமேஜ்னு அர்த்தம்..
Acne Tells About Your Health : உண்மையில் முகத்தில் எந்தப் பகுதியில் பருக்கள் வந்தாலும், உடலில் இந்தப் பகுதி சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் உங்கள் முகத்தில் உள்ள பருக்களை குறைக்க முடியவில்லையா..? அப்போ உங்கள் உடல் உறுப்புகள் பிரச்சனையில் இருக்கு என்று அர்த்தம். ஆம், உண்மையில் முகத்தில் எந்தப் பகுதியில் பருக்கள் வந்தாலும், உடலில் இந்தப் பகுதி சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நெற்றியில் பருக்கள் வருவது: உங்கள் நெற்றியில் பருக்கள் வந்தால் உங்கள் செரிமான ஆரோக்கியம் மோசமாகவுள்ளது என்று அர்த்தம். இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஜீரணிப்பது கடினம். எனவே, அவற்றை சாப்பிடுவதை நிறுத்துங்கள். மேலும், உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். மற்றும் செரிமானத்தை மேம்படுத்த எலுமிச்சை மற்றும் ஆப்பிள் ஜூஸ் தொடர்ந்து குடிக்கவும்.
புருவங்களுக்கு இடையே பருக்கள் வருவது: உங்கள் புருவங்களுக்கு இடையே பருக்கள் வந்தால் உங்கள் கல்லீரலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். கல்லீரலை அகற்ற ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். குறிப்பாக, நொறுக்கு தீனிகள், வறுத்த உணவுகள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மூக்கில் பருக்கள் வருவது: உங்கள் மூக்கில் எப்போதும் பருக்கள் வந்தால் உங்கள் இதய பலவீனமாக இருக்கிறது அர்த்தம். இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது தான் மூக்கில் பருக்கள் வரும். எனவே, இரத்த அழுத்தத்தை சமாளிக்க உங்கள் உணவில் உப்பின் அளவை சமப்படுத்தவும். ஆற்றல் பானங்கள் மற்றும் ஆல்கஹால் குடிப்பதை நிறுத்தவும். வழக்கமான உடற்பயிற்சி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
கன்னங்களில் பருக்கள் வருவது: காற்று மாசுபாடு காரணமாக கன்னங்களில் பருக்கள் வரலாம். ஆனால், கன்னங்களில் வரும் பருக்கள் நுரையீரலுடன் தொடர்புடையவை. அசுத்தமான காற்றை சுவாசிக்கும் போது அதன் நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே, நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க சுத்தமான சூழலில் நேரத்தை செலவிடுங்கள். சருமத்திற்கு ஊட்டமளிக்க கிரீன் டீ குடிக்கவும். நீங்கள் அதிக நேரம் மொபைல் போனில் பேசுகிறீர்கள் என்றால், அதை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், போனில் இருக்கும் கிருமிகள் கன்னங்களில் ஒட்டிக் கொள்ளிம். இதனால் பருக்கள் வரும்.
இதையும் படிங்க: Beauty Tips : ஓரே இரவில் முக பரு மறைய தேங்காய் எண்ணெயுடன் 'இத' கலந்து முகத்தில் தடவினால் போதும்!
கன்னங்களின் கீழ்ப்பகுதியில் பருக்கள் வருவது: உங்கள் கன்னங்களின் கீழ்ப்பகுதியில் பருக்கள் வந்தால் உங்கள் பற்களின் ஆரோக்கிய மோசமாக உள்ளது என்று அர்த்தம். கன்னங்களில் உள்ள இந்த பருக்களைப் போக்க உங்கள் பற்களின் தூய்மை மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
இதையும் படிங்க: Beauty Tips : ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் மறைய புதினா இலை ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!
கன்னத்தில் முகப்பரு: ஹார்மோன் மாறும் போது கன்னத்தில் முகப்பரு வரும். மாதவிடாய் காலங்களில் கூட இங்கு பருக்கள் வரும். மாதவிடாய் தவிர, கன்னத்தில் பருக்கள் வந்தால் குடல் ஆரோக்கியம் மோசமாக உள்ளது என்று அர்த்தம். மேலும், உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்கும் உணவை நீங்கள் சாப்பிடவில்லை என்று அர்த்தம். மேலும் போதுமான அளவு தூக்கமில்லை என்றால் கன்னத்தில் பருக்கள் வரும். எனவே, இதை தவிர்க்க ஆரோக்கியமான உணவு, போதுமான அளவுக்கு தண்ணீர், 8 மணி நேரம் தூக்கம் போன்றவை அவசியம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D