ஃப்ரிட்ஜை சுவரை ஒட்டி வைக்காதே!
பெரும்பாலானவர் வீடுகளில் ஃப்ரிட்ஜை சுவரில் ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனால் இது நல்லதல்ல. ஃப்ரிட்ஜ் சுவரில் ஒட்டி இருந்தால் காற்றோட்டம் தடைப்பட்டு, பிரிட்ஜ் உற்பத்தியாகும் வாயு வெளியேற முடியாமல் போகும். இதன் விளைவாக ப்ரீசரில் பனிக்கட்டிகள் சேர தொடங்கும். அது மட்டுமில்லாமல் ஃப்ரிட்ஜின் குளிர்ச்சி மற்றும் தரம் பாதிக்கப்படும். மேலும் பிரிட்ஜ் சூடாகி விரைவில் சேதமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளன.
ஃப்ரிட்ஜை அடிக்கடி மற்றும் நீண்ட நேரம் திறக்காதே!
ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்தாலோ அல்லது நீண்ட நேரம் திறந்து வைத்திருந்தாலோ, வெளியே இருக்கும் சூடான காற்று பிரிட்ஜ் உள்ளே சென்று குளிர்ந்த காற்றுடன் மோதி, ஈரப்பதத்தை அதிகரிக்கு. இதன் காரணமாக ஃப்ரீசரில் உள்ள பனிகள் உறையத் தொடங்கும்.