ஆப்பிள் vs பேரிக்காய்: இந்த ரெண்டுல எந்த பழம் ஆரோக்கியத்திற்கு பெஸ்ட்?

Published : Jul 23, 2025, 10:49 AM IST

பேரிக்காய் அல்லது ஆப்பிள் இவை இரண்டில் எந்த பழம் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
Apple or Pear Health Benefits

ஆப்பிள் மற்றும் பேரிக்காய் இவை இரண்டையுமே பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இரண்டு பழங்களை சிற்றுண்டியாக சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி கட்டுப்படுத்தப்படும். இவை இரண்டிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், அவை எடை இழப்பு இதயம், செரிமானம், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துதல் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும். இப்படி இவை இரண்டும் பலவித ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் எது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரும் என்ற சந்தேகம் இருக்கிறதா? உங்களுடைய சந்தேகத்திற்கான பதிலை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
கலோரிகள் :

பேரிக்காய் மற்றும் ஆப்பிள் இவை இரண்டிலும் கலோரிகள் குறைவாகவே உள்ளன. அதாவது ஆப்பிளில் 95 கலோரிகளும், பேரிக்கையில் 101 கலோரிகளும் உள்ளன. மேலும் இரண்டிலும் கொழுப்புகள் கிடையாது. மாறாக நீர்ச்சத்து அதிகமாகவே உள்ளன. அதுபோல ஆப்பிளில் 25 கிராம் மற்றும் பேரிக்காயில் 27 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

பேரிக்காயை விட ஆப்பிளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாகவே உள்ளன. இது செல்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் பாதிக்கப்படுவதை தடுக்க உதவுகிறது மேலும் நாள்பட்ட நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.

35
நார்ச்சத்து

உங்களுக்கு நார்ச்சத்து அதிக தேவை என்றால் பேரிக்காய் சிறந்த தேர்வாகும். ஏனெனில் ஒரு மீடியமான பேரிக்காயில் சுமார் 6 கிராம் நார்ச்சத்து உள்ளன. ஆப்பிளிலோ வெறும் 4 கிராம் மட்டுமே உள்ளன.

நார்ச்சத்து நன்மைகள்

நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் இதய நோய், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு நோய், புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் அபாயத்தை குறைக்கலாம் என்று தி லான்சட் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளன.

45
பிற ஊட்டச்சத்துக்கள் :

- ஆப்பிள் மற்றும் பெருக்கல் இவை இரண்டிலும் பொட்டாசியம் சம அளவில் உள்ளதால், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இவை இரண்டிலும் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

- பேரிக்காயில் காப்பர், ஃபோலேட் வைட்டமின் கே ஆப்பிளை விட சற்று அதிகமாக இருப்பதால் இது ரத்த உறைதல், சிவப்பு ரத்த செல்களின் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

- ஆப்பிள் மற்றும் பேரிக்காய் இவை இரண்டுமே வயதான தோற்றத்தை கட்டுப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், கண் பார்வையை மேம்படுத்த உதவும்.

- இந்த இரண்டு பழங்களிலுமே புரோட்டீன் 1 கிராம் அளவு மட்டுமே உள்ளன.

55
எது நல்லது?

பேரிக்காய் மற்றும் ஆப்பிள் இவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், நன்மைகளின் அடிப்படையில் இவை இரண்டும் வெவ்வேறானது. இவை உங்களது தேவைகளுக்கு ஏற்ப நன்மைகளை வழங்கும். ஆனால் இவை எதில் அதிக நன்மை தரும் என்று முடிவு செய்ய முடியாது. ஆகவே நீங்கள் ஒரு நாளைக்கு ஆப்பிள் மற்றொரு நாளைக்கு பேரிக்காய் என்று சாப்பிடலாம். இல்லையென்றால் இரண்டுமே ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories