
ஸ்வீட்ஸ் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. நம்மில் பலரும் இனிப்புகளை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள் உண்டு. அதிலும் குறிப்பாக, Sugar carvings உள்ளவர்கள் ஒருநாளைக்கு ஏதாவது ஒரு இனிப்பை சாப்பிட்ட பிறகு தான் நிம்மதியாகவே உணர்வார்கள். Sugar carvings என்பது இனிப்பை விரும்பி சாப்பிடுபவர்கள் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். புகை பிடித்தல் மது அருந்துதல் கைவிடுவது எவ்வளவு கடினமோ, அதுபோல தான் இந்த Sugar carvings கைவிடுவது அவ்வளவு கடினம் என்று சில ஆய்வுகள் சொல்லுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் பலருக்கு இனிப்பு சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல தெரியுமா? அப்படி இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரை உள்ளடக்கம் அதிகமாகவே இருக்கும். எனவே நீங்கள் இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் சர்க்கரை விரைவாக திரவ வடிவில் உடலில் சேர்ந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரித்து விடும். இந்த பழக்கம் நீண்ட காலமாக தொடர்ந்தால் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளன.
செரிமான பாதிப்பு
பொதுவாக இனிப்பு சாப்பிட்ட பிறகு செரிமான செயல்முறையானது சிறிது நேரம் கழித்து தான் தொடங்கும். இத்தகைய சூழ்நிலையில் உடனே தண்ணீர் குடித்தால் அந்த செயல்முறையானது சீர்குலைந்து விடும். அதாவது, ஏதேனும் இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் செரிமானம் மெதுவாகும். நீரானது செரிமான அமிலங்களை பலவீனப்படுத்தும். இதன் விளைவாக அஜீரணம், வாயு, அமலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும். எனவே, ஸ்வீட் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால், கலோரிகள் தண்ணீருடன் கலந்து கொழுப்பாக மாற வாய்ப்பு அதிகமுள்ளது. இதனால் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்தால், எடை அதிகரிக்கும்.
வளர்சிதை மாற்றம் குறையும்
வளர்சிதை மாற்றம் என்பது நாம் சாப்பிடும் உணவை ஆற்றலாக மாற்றும் செயல்முறை ஆகும். இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால், இந்த செயல்முறையானது மெதுவாகும். இது உடலின் ஆற்றல் அளவை குறைத்து அதிகரிக்கும்.
இனிப்பு சாப்பிட்ட பிறகு குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான செரிமான நொதிகள் சரியாக செயல்படும். செரிமானம் சீர்குலையாது. அதுபோல இனிப்பு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
குறிப்பு
இனிப்பு சாப்பிடுவதில் தவறில்லை ஆனால் இனிப்பு சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது. அதுதான் தவறு. அதுவும் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், செரிமான கோளாறு பிரச்சனை உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் இந்த பழக்கத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும். இல்லையெனில் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.