பூரி, பஜ்ஜி போடுறப்ப மிச்சமாகும் எண்ணெய் - இப்படி யூஸ் பண்ணுங்க!

Published : Feb 19, 2025, 11:02 AM ISTUpdated : Feb 19, 2025, 11:06 AM IST

Frying Oil Reuse Tips : பொரித்த எண்ணெய் மீந்து போனால் அதை குப்பையில் போடாமால் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.

PREV
16
பூரி, பஜ்ஜி போடுறப்ப மிச்சமாகும் எண்ணெய் - இப்படி யூஸ் பண்ணுங்க!
பூரி, பஜ்ஜி போடுறப்ப மிச்சமாகும் எண்ணெய் - இப்படி யூஸ் பண்ணுங்க!

பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வீணா போகாமல் இருக்க வேண்டும் என்று தான் நாம் நினைப்போம். ஆனால், பொரித்த பிறகு மீந்து இருக்கும் எண்ணெயை பயன்படுத்த மாட்டோம். குப்பையில் வீசிவிடுவோம். ஏனெனில் பொரித்த பிறகு மீதமாக இருக்கும் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் தான் நாம் மீந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதில்லை. ஆனால், மீந்த  எண்ணெயை நீங்கள் வீணாக்காமல் மறுபடியும் பயன்படுத்தலாம் தெரியுமா? இப்போது இந்த பதிவில் பொரித்து மீந்திருக்கும் எண்ணெயை பல்வேறு வழிகளில் பயன்படுத்தும் முறை குறித்து இங்கு காணலாம்.

26
பூச்சிகளை விரட்டலாம் பயன்படுத்தலாம்:

பொதுவாக சமையலறையில் கரப்பான் பூச்சி, பல்லி, கொசுக்கள் போன்றவற்றின் தொல்லைகள் அதிகமாகவே இருக்கும். எனவே இவற்றை விரட்ட பொரித்து மீதமாக இருக்கும் எண்ணெயுடன் சிறிதளவு மண்ணெயுடன் கலந்து அவற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதை பூச்சிகள் வரும் இடங்களில் தெளித்தால், பூச்சிகள் இனி வரவே வராது.

இதையும் படிங்க:  மீன் பொரித்த எண்ணெய்யில் 'இத்தனை' விஷயம் பண்ணலாமா? 

36
தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தலாம்:

பொரித்து மீதமாக இருக்கும் எண்ணெயை தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தலாம். ஆனால் அதை நேரடியாக செடிகளுக்கு ஊற்றக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் செடிகளின் வளர்ச்சி  தான் பாதிக்கப்படும்.  எனவே எண்ணெயுடன் தண்ணீரில் கலந்து பிறகு தான் செடிகளுக்கு ஊற்ற வேண்டும். இதனால் செடிகளுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.

இதையும் படிங்க:  இந்த எண்ணெய் மிகவும் ஆபத்தானது.. இந்தியாவில் 20 லட்சம் பேர் இறப்பு- எந்த ஆயில்?

46
சுற்றுச்சூழல் நன்மை:

மீதமான எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் குப்பையில் வீணாக வீசுவது தடுக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ரொம்பவே நல்லது. உண்மையில், மீந்த எண்ணெயை குப்பையில் வீசுவதால் மண் அரிப்பு மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுகிறது. எனவே இதை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டை குறைத்து விடலாம்.

56
துருப்பிடித்த இரும்பை சுத்தம் செய்யலாம்:

வீட்டில் இரும்பு பொருட்கள் ஏதாவது துருப்பிடித்து இருந்தால் அவற்றை சுத்தம் செய்ய மீந்து போன எண்ணெயை பயன்படுத்தலாம். ஏனெனில் எண்ணெயில் அரிப்பை தடுக்கும் தன்மை உள்ளன. அவற்றைக் கொண்டு சுத்தம் செய்யும் போது இரும்பில் ஈரப்பதம் தங்காமல் இருக்கும் மற்றும் துருப் பிடிக்காது. சமையலுக்கு பயன்படுத்திய என்னை இரும்பை பாதுகாக்க பயன்படுத்தலாம்.

66
மரச்சாமான்களை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்:

வீட்டில் இருக்கும் பழைய மர சாமான்களில் பளபளப்பு மங்கி காணப்பட்டால், பொரித்து மீதமான எண்ணெயில் துணி நினைத்து அதை கொண்டு மர சாமான்களை சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் மர சாமான்கள் மீண்டும் பளபளப்பாக இருக்கும். இது தவிர மர சாமான்கள் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories