
உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதாகும். எனவே குழந்தைகளை மொபைல் போன் மற்றும் டிவியில் இருந்து விலகி, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதிலும், மொபைல் போனில் கேம்களை விளையாடுவதிலும், டிவி பார்ப்பதிலும் தங்களை தங்களது நாட்களை கழிக்கிறார்கள். இதனால் அவர்கள் சுறுசுறுப்பாக இல்லாமல் அவர்களது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உடல் வலிமையாக இருக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். எனவே, உங்களது குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்கப்படுத்துங்கள். ஆனால் அது அவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது. அவர்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் விருப்பத்துடன் அதில் பங்கேற்க முடியும். ஒருவேளை உங்களது குழந்தை உடற்பயிற்சி, யோகா மற்றும் விளையாட்டுகளில் இருந்து விலகி செல்ல தயங்கினால், அவர்களை அதை எவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்பதற்கான சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.
குழந்தைகள் விளையாடுவதை திரும்பவே விரும்புவார்கள். எனவே உடற்பயிற்சி அவர்களுக்கு ஒரு விளையாட்டாக ஆக்குங்கள். ஓடுதல், குதித்தல் போன்றவற்றை இவற்றுடன் இணைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியை ஒரு விளையாட்டாக மாற்றினால் உங்களது குழந்தைகள் நிச்சியமாக அதை மகிழ்ச்சியுடன் செய்வார்கள்.
உடற்பயிற்சி கூட்டாளி:
ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் பெற்றோருடன் நேரத்தை செலவிடுவதுதான் விரும்புவார்கள். எனவே உடற்பயிற்சி ஒரு குடும்ப செயலாளராக நீங்கள் ஆக்குங்கள். உங்கள் குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய சொல்வதற்கு பதிலாக அவர்களுடைய நீங்களும் உடற்பயிற்சி செய்யுங்கள். அதாவது ஒன்றாக யோகா செய்தல், நடைப்பயிற்சி செய்தல் போன்றவை. பெற்றோர்கள் உடற்பயிற்சி செய்யும் போது குழந்தைகளும் அதை ஆர்வத்துடன் செய்ய விரும்புவார்கள். இதன் மூலம் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையான உறவு வலுப்படும்.
உங்கள் குழந்தை விரும்பாத செயலில் அவர்களை ஒருபோதும் ஈடுபடுத்த வேண்டாம். உடற்பயிற்சி அவர்களுக்கு கடினமாக இருக்கக் கூடாது. மகிழ்ச்சியாக தான் இருக்க வேண்டும். எனவே அவர்கள் செய்ய விரும்பும் பயிற்சியில் அவர்கள் ஈடுபடுத்துங்கள். அதாவது சில குழந்தைகள் சைக்கிள் ஓட்டுதல், கேட்டரிங், தற்காப்பு கலை போன்றவற்றை விரும்பலாம். அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்ய ஊக்குவிக்கவும். அதனால் அவர்கள் எல்லா நேரத்திலும் தயங்காமல் செய்வார்கள்.
இதையும் படிங்க: ஸ்கூலுக்கு போகும் குழந்தைக்கு இந்த '4'விதைகளை கண்டிப்பா கொடுங்க; புத்திசாலியாக வளருவாங்க!
குழந்தைகளுக்கு சிறிய சவால்கள் கொடுங்கள். மேலும் அதனுடன் சில பரிசுகளும் அவர்களுக்கு வழங்குகள். இது அவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய மிகவும் ரசிக்க வைக்கும்.
இசை:
குழந்தைகள் விரும்பும் இசையுடன் சேர்த்து உடற்பயிற்சி செய்ய சொல்லுங்கள். இது அவர்களை மேலும் மகிழ்ச்சியாக மாற்றும் மேலும் அவர்களது கடினமாக உணர மாட்டார்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இந்த ட்ரிங்க்ஸ் நல்லது; ஆனா இந்த '4' மட்டும் கொடுக்காதீங்க!!
குழந்தைகள் டிவி, மொபைல் போனில் அதிக நேரம் செலவிட்டால் அவர்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் ரொம்பவே கம்மி. எனவே அவர்களுக்கான திரை நேரத்தை குறைத்து வெளியே விளையாட ஊக்குவிக்கவும். சைக்கிள் ஓட்டுதல், வெளிப்புற விளையாட்டு போன்றவற்றைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். இதை நீங்கள் அவர்களது தினசரி செயலாக மாற்றினால் அவர்கள் அதை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்துக்கொள்வார்கள்.