Breakup: உயிருக்கு உயிராக நேசித்தவர் உங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாரா? காதல் தோல்வியால் மனமுடைந்து இருக்கிறீர்களா? அந்த வலியிலிருந்து வெளியே வர நினைக்கிறீர்களா? அப்போ இந்த 3 கடுமையான விதிகளைப் பின்பற்றுங்கள்... நிச்சயம் மீண்டு வருவீர்கள்.
காதல் என்கிற உணர்வு எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அந்த உறவு முறியும்போது ஏற்படும் வலி அதைவிடக் கொடூரமானது. பிரேக்கப் ஒருவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கும். அந்த நேரத்தில் பழைய நினைவுகள், விரக்தி, மன அழுத்தம் போன்றவை நம்மைத் துரத்தி அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும். ஆனால், இந்த மன வேதனையிலிருந்து வெளியே வந்து, வாழ்க்கையில் முன்னேறிச் செல்வது எல்லோருக்கும் ரொம்ப முக்கியம். மருத்துவர்கள் சொல்லும் இந்த 3 கடுமையான விதிகளைப் பின்பற்றினால், பிரேக்கப் வலியிலிருந்து மீண்டு வரலாம். அது என்னென்னனு பார்ப்போம்.
24
முன்னாள் காதலரை மறப்பது எப்படி?
பிரேக்கப் ஆனதும் பலரும் செய்யும் பெரிய தவறு, பிரிந்து சென்றவரை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதுதான். போன் செய்வது, மெசேஜ் அனுப்புவது அல்லது அவர்களின் சோஷியல் மீடியா பக்கங்களை அடிக்கடி பார்ப்பது உங்கள் வலியை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது. என்ன செய்ய வேண்டும்? உங்கள் முன்னாள் பார்ட்னருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் கட் செய்ய வேண்டும். அவர்களின் போன் நம்பரை டெலீட் செய்யுங்கள், சோஷியல் மீடியாவில் அன்ஃபாலோ அல்லது பிளாக் செய்யுங்கள். இந்த ‘நோ காண்டாக்ட்’ விதியைப் பின்பற்றும்போது, அவர் இல்லாத புதிய சூழலுக்குப் பழகிக்கொள்ள உங்கள் மூளைக்கு நேரம் கிடைக்கும்.
34
காதல் தோல்விக்கு பிறகு என்ன செய்வது?
கண்ணுக்கு முன்னால் பழைய நினைவுகள் இருக்கும் வரை, உங்கள் மனம் அதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம். அவர்கள் கொடுத்த பரிசுகள், ஒன்றாக எடுத்த போட்டோக்கள், கடிதங்கள் அல்லது மெசேஜ்கள் ஒவ்வொரு நொடியும் அந்த வலியை உங்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும். என்ன செய்ய வேண்டும்? உங்கள் தனிப்பட்ட இடத்திலிருந்து (personal space) பழைய நினைவுகளைத் தரும் பொருட்களை அப்புறப்படுத்துங்கள். போனில் இருக்கும் பழைய போட்டோக்கள், சாட்களை டெலீட் செய்யுங்கள். இப்படி டிஜிட்டல் மற்றும் நிஜ அடையாளங்களை நீக்கும்போது, உங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும். மெதுவாக நீங்கள் நிகழ்காலத்தில் வாழத் தொடங்குவீர்கள்.
ஒருவர் நம்மை விட்டுப் போனதால் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சோகமாகவே உட்கார்ந்திருந்தால், உங்கள் உடல் மற்றும் மனநலம் தான் பாதிக்கப்படும். இந்த நேரத்தில் உங்களை நீங்களே நேசிப்பது ரொம்ப முக்கியம். உங்கள் தினசரி வாழ்க்கையை மாற்றுங்கள். உடற்பயிற்சி, யோகா அல்லது தியானம் செய்யுங்கள். இது மூளையில் மகிழ்ச்சியைத் தரும் எண்டோர்பின்களை வெளியிடும். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள், புதிய திறமைகளைக் (Skills) கற்றுக்கொள்ளுங்கள் அல்லது உங்கள் மீது கவனம் செலுத்துங்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது தனிமையை விரட்டும். பிரேக்கப்பிற்குப் பிறகு வலிப்பது இயல்புதான், ஆனால் அதிலேயே மூழ்கிவிடக் கூடாது. காலம் எல்லா காயங்களையும் ஆற்றும். மேலே சொன்ன 3 விதிகளை நீங்கள் சரியாகப் பின்பற்றினால், இந்த வலியிலிருந்து சீக்கிரம் வெளியேறி, வாழ்க்கையில் இன்னும் வலிமையாக முன்னேறலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.