
முக அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போலவே, கால்களின் அழகிலும் பெண்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை நாட்கள், திருமண நிகழ்ச்சிகள் அல்லது பார்ட்டிகளுக்கு செல்லும்போது அழகான செருப்புகளுடன் கால்நகங்களும் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக பெடிக்யூர் (Pedicure) செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது.
ஆனால், பெடிக்யூர் தற்போது வெறும் நகங்களை சுத்தம் செய்து பாலிஷ் போடுவதோடு நின்றுவிடாமல், விதவிதமான நிறங்கள், டிசைன்கள் மற்றும் பளபளப்பான ஃபினிஷ்களுடன் புதிய டிரெண்டாக மாறியுள்ளது.
குறிப்பாக, தற்போது சிம்பிள் மற்றும் எலிகன்ட் (Simple and Elegant Look) லுக்கிலிருந்து, கண்ணைக் கவரும் கிளிட்டர் ஃபினிஷ் வரை பலவிதமான பெடிக்யூர் ஸ்டைல்கள் பெண்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது டிரெண்டாகும் 10 பெடிக்யூர் டிசைன்களை இங்கு பார்ப்போம்.
அடர் சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறமான ( Matte Burgundy) nail polish தற்போது பிரபலமாகி வரும் மெனிக்யூர் நிறங்களில் ஒன்றாகும். பளபளப்பு இல்லாத மேட் ஃபினிஷ், கால்விரல் நகங்களுக்கு அழகான மற்றும் க்ளாஸியான தோற்றத்தை அளிக்கிறது. பார்ட்டி உடைகள் மட்டுமின்றி, தினசரி அணியும் கேஷுவல் உடைகளுடனும் இந்த நிறம் அழகாகப் பொருந்தும்.
சாக்லேட் போன்ற அடர் பழுப்பு நிற nail polish மீண்டும் டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக, ஹை-க்ளாஸ் ஜெல் ஃபினிஷ் (High-Class Gel Finish) கொடுத்தால் நகங்கள் அதிக பளபளப்புடன், அழகாகவும், ரிச்சாகவும் தெரியும். எளிமையை விரும்பும் பெண்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
ஊதா நிறத்தை விரும்புபவர்கள் வழக்கமான லைட் பர்பிளுக்குப் பதிலாக சிவப்பு கலந்த அடர் ஊதா நிறத்தை தேர்வு செய்யலாம். இந்த நிறம் நகங்களுக்கு அழகான தோற்றத்தை கொடுக்கும். அதேசமயம், வழக்கமான நெயில் பாலிஷ் நிறங்களில் இருந்து சற்று வித்தியாசமாக இருப்பதால், ஸ்டைலான லுக்கையும் கொடுக்கும்.
இந்த நிறம் பார்ட்டி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமாக இருக்கும். இதில் கிளாஸி ஃபினிஷ் கொடுத்தால் நகங்கள் இன்னும் பளபளப்பாகவும், ஸ்டைலாகவும் தெரியும்.
சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறங்களுக்கு இடைப்பட்ட இந்த அடர் ஆரஞ்சு ஷேடு, அனைத்து சரும நிறங்களுக்கும் அழகாகப் பொருந்தும். குறிப்பாக ஹை-க்ளாஸ் ஜெல் ஃபினிஷ் கொடுத்தால், கால்விரல் நகங்கள் பளபளப்பாகவும், நிறம் அடர்த்தியாகவும் ரிச்சான தோற்றத்துடனும் தெரியும்.
வழக்கமாக தேர்வு செய்யும் சிவப்பு, இளஞ்சிவப்பு நிறங்களில் இருந்து சற்று மாறுபட்டு, புதிதாக ஒரு நிறத்தை முயற்சி செய்ய விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
ரோஸ் கோல்டு மற்றும் வெண்கல நிறங்களுக்கு இடைப்பட்ட இந்த ஷேடு, மெட்டாலிக் போல பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கும். மற்ற நிறங்களைப் போல அதிகமாக வெளிப்படையாகத் தெரியாமல், ஒளி படும்போது நகங்களில் அழகாக மின்னும். அதிக டிசைன் எதுவும் தேவையில்லாமலேயே, நகங்களுக்கு நகை அணிந்தது போன்ற ரிச்சான தோற்றத்தை இந்த காப்பர் நிறம் கொடுக்கும்.
ஸ்மோகி ஆலிவ் (Smoky Olive) என்பது சாம்பல் (Grey) மற்றும் ஆலிவ் பச்சை (Olive Green) கலந்த ஒரு மென்மையான, இயற்கையான நிறமாகும். வழக்கமான பச்சை நிறத்தைப் போல பளிச்சென்று இல்லாமல், சற்று அடர்த்தியாகவும் மங்கலான தோற்றத்துடனும் இருக்கும்.
சாம்பல் கலந்த இந்த பச்சை நிற நியூட்ரல் நெயில் பாலீஷ் தற்போது டிரெண்டாகி வரும் நெயில் பாலிஷ் நிறங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, பலவிதமான ஆடைகளுடன் எளிதாகப் பொருந்துவதால், தினசரி அணிவதற்கும் இது சிறந்த தேர்வாக இருக்கும்.
கேட்-ஐ நெயில் பாலிஷ் தற்போது மீண்டும் டிரெண்டாகி வருகிறது. முன்பு இருந்த காஸ்மிக் அல்லது கேலக்ஸி லுக்கைவிட (Cosmic or Galaxy Look) இது வெல்வெட் துணி போல மென்மையான பளபளப்புடன் காணப்படுகிறது.
இந்த பாலிஷில் உள்ள காந்தத் துகள்கள் காரணமாக, நகங்களில் ஒளி படும்போது கோடுகள் நகர்வது போல தெரியும். இதனால் அடர் நிற பாலிஷ் போட்டாலும் நகங்கள் ஒரே மாதிரியாக இல்லாமல், அழகாகவும், பளபளப்புடனும் தெரியும்.
குறிப்பாக அடர் சிவப்பு மற்றும் ஊதா நிறம், பிரவுன், பச்சை போன்ற அடர் நிறங்களை பேஸ் கோட்டாக பயன்படுத்தி கேட்-ஐ ஃபினிஷ் கொடுத்தால் மிகவும் அழகாக இருக்கும். அதிக டிசைன் இல்லாமலேயே நகங்களுக்கு 3D போன்ற ரிச்சான தோற்றத்தை கொடுக்கும்.
Espresso Glaze நிறம் என்பது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும் பெடிக்யூர் ஸ்டைல். இது கருப்பு மற்றும் சாக்லேட் பிரவுன் நிறங்களுக்கு இடைப்பட்ட ஷேடு என்பதால், நகங்களுக்கு அழகான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை தரும்.
இதோடு, ஹை-ஷைன் ஜெல் ஃபினிஷ் கொடுத்தால் நகங்கள் பளபளப்பாகவும், ரிச்சாகவும் தெரியும். அதிக டிசைன் இல்லாமலேயே க்ளாஸியான லுக் வேண்டுமென்றால், Espresso Glaze நல்ல தேர்வாக இருக்கு
வழக்கமாக பிரெஞ்ச் பெடிக்யூரில் நகத்தின் முனையில் வெள்ளை நிறம் போடுவார்கள். ஆனால், இந்த டிரெண்டில் அதற்கு பதிலாக பச்சை, ஊதா போன்ற நிறங்களை நகத்தின் முனையில் மெல்லிய கோடு போல போடுகிறார்கள்.
நகத்தின் அடிப்பகுதியில் மில்கி வைட் அல்லது லைட் நியூட் நிறம் இருப்பதால், நகங்கள் சுத்தமாகவும் அழகாகவும் தெரியும். முனையில் இருக்கும் அடர் நிறம் கூடுதல் ஸ்டைலான லுக்கை கொடுக்கும். சிம்பிளாகவும், அதே நேரத்தில் டிரெண்டியாகவும் இருக்க விரும்புபவர்களுக்கு இந்த பெடிக்யூர் நல்ல சாய்ஸ்.
காப்பர், பிரெஞ்ச் போன்ற மெட்டாலிக் நிறங்களுடன், வெள்ளி நிறமும் தற்போது டிரெண்டாகி வருகிறது. கண்ணாடி போல பளபளக்கும் இந்த சில்வர் ஃபினிஷ், கால்விரல் நகங்களுக்கு கூலான மற்றும் ஸ்டைலான லுக்கை கொடுக்கும்.
அதிக டிசைன் இல்லாமலேயே நகங்கள் ரிச்சாக தெரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நிறத்தை தாராளமாக முயற்சி செய்யலாம். குறிப்பாக விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு செல்லும்போது இந்த அலங்காரம் கால்விரல் நகங்களுக்கு அழகான தோற்றத்தை கொடுக்கும்.
இந்த செப்டம்பர் மாத பெடிக்யூர் அலங்காரங்களில் அடர் சிவப்பு, சாக்லேட் பழுப்பு, ஊதா, ஆரஞ்சு, ஆலிவ் பச்சை மற்றும் வெள்ளி நிறங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது. உங்களுக்கு பிடித்ததை நீங்கள் தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.