kanchipuram temple idli : காஞ்சிபுரம் இட்லி...அதே பாரம்பரிய சுவையில் நம்ம வீட்டில் ஈஸியா எப்படி செய்யலாம்?

Published : Aug 07, 2026, 08:36 PM IST

காஞ்சிபுரம் கோவில் இட்லி தென் இந்திய உணவுப் பாரம்பரியத்தின் அடையாளம். மந்தாரை இலை, மூங்கில் கூடை, பித்தளைப் பாத்திரங்களில் தயாராகும் இதன் நறுமணமும் சுவையும் தனித்துவமானது. முன்னோர்களின் ஆரோக்கிய உணவு முறைக்கு இந்த பிரசாதம் சிறந்த சான்று!

PREV
17
பாரம்பரிய காஞ்சிபுரம் இட்லி :

ஆன்மீக மணமும், பாரம்பரிய சுவையும் ஒன்றாகக் கலந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் இட்லியின் சுவைக்கு ஈடு இணையே இல்லை. வழக்கமாக நாம் சுவைக்கும் பஞ்சு போன்ற இட்லிகளை விட, சுக்கு, மிளகு, சீரகம் மற்றும் பெருங்காயத்தின் நறுமணத்தோடு நெய்யில் மிளிரும் இந்த கோவில் இட்லி ஒரு தனித்துவமான உணவு அனுபவத்தைக் கொடுக்கும். கோவில் மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் அதே தெய்வீகச் சுவையையும், மாறாத மணத்தையும் நமது வீட்டின் சமையலறையிலேயே மிக எளிதாக எப்படி கொண்டு வருவது என்பதை விரிவாகவும் சுவாரசியமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

27
தானியங்களின் சரியான அளவு மற்றும் ஊறவைக்கும் முறை :

தேவையான பொருட்களின் அளவு: பச்சரிசி 1 கப், புழுங்கல் அரிசி 1 கப் மற்றும் உளுந்தம்பருப்பு 1 கப் என்ற சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும். அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாகக் கழுவி குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

37
மாவு அரைக்கும் பதம் :

மாவு அரைக்கும் போது உளுந்தை முதலில் மென்மையாக ஆட்டி எடுத்த பிறகு, அரிசியை மிக நைஸாக அரைக்காமல் 'ரவை' பதத்திற்கு கொரகொரப்பாக அரைக்க வேண்டும். இரண்டையும் ஒன்று சேர்த்து தேவையான கல் உப்பு போட்டு கரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். மாவு நைஸாக இருந்தால் கோவில் இட்லியின் பாரம்பரிய பதம் கிடைக்காது.

47
நறுமணப் பொடி தயாரித்தல் :

மசாலா பொருட்கள்: 2 ஸ்பூன் மிளகு, 2 ஸ்பூன் சீரகம் மற்றும் 1 துண்டு காய்ந்த சுக்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை வறுக்காமல், ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ள வேண்டும். சுக்கு பொடி தனித்துவமான நறுமணத்தையும் செரிமானத்தையும் தரும்.

57
தாளிப்பும் சிறப்பு நறுமணமும் :

வாணலியில் தாராளமாக சுத்தமான பசு நெய் ஊற்றி, பொடித்த மிளகு-சீரகம்-சுக்கு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்க வேண்டும். இந்தத் தாளிப்பை புளித்த மாவில் ஊற்றி மெதுவாகக் கிளற வேண்டும்.

67
பாத்திரத் தேர்வும் அவிக்கும் முறையும் :

பாரம்பரிய முறை- கோவில் இட்லியை டம்ளர் அல்லது ஆழமான கிண்ணங்களில் நெய் தடவி ஊற்றி அவிக்கலாம்.துணி பாத்திரத்தில் அவிப்பது கூடுதல் சுவை தரும். இட்லி பாத்திரத்தில் மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். கத்தி அல்லது குச்சியால் குத்திப் பார்த்து வெந்ததும் இறக்கலாம்.

77
பரிமாறும் முறை மற்றும் சுவைக்கூட்டல் :

மிளகு, சீரகம் மற்றும் நெய்யின் நறுமணம் கமழும் சூடான காஞ்சிபுரம் இட்லியை காரசாரமான மிளகாய் பொடி, நல்லெண்ணெய் அல்லது கெட்டித் தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories