Summer Tips : கொளுத்தும் வெயிலிலும் வீடு ஜில்லுன்னு இருக்கனுமா?ஏசி எல்லாம் வேண்டாங்க!ஈஸியா இத பண்ணுங்க போதும்!

First Published Mar 22, 2023, 2:09 PM IST

இந்த கோடை வெயிலில் வீட்டில் ஏசி இல்லாமல், வீடு முழுவதும் குளுகுளுவென வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

இப்போது கோடை வெயில் ஆரம்பமாகி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலை சமாளிக்க பலரும் ஏசி அறையை விட்டு வெளியே வருவதில்லை. ஆனால் ஏசி அனைவரது வீட்டிலும் இருப்பதில்லை. ஏசியின் அதிக விலை மற்றும் மினசாரக் கட்டணம் போன்றவையால் பலரால் அதனை வாங்கி உபயோகிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இந்த கோடை வெயிலில் வீட்டை குளுகுளுவென்று மாற்ற ஏசி இல்லாமல் , வீட்டை எப்படி குளுகுளு வென்று வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

மண்பானை:

சம்மர் ஸ்டார்ட் ஆனாலே அனல் காற்றும் கூடவே வருமென்று நமக்கு தெரிந்த ஒன்று .ஆனால் இப்படி வரும் அனல் காற்றை ஈரப்பததோடு வைத்துக் கொள்ள வீடுகளில் மண் பானைகளில் தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்வதால், அதிலிருந்து வரும் ஆவியாகும் தண்ணீர் காற்றை ஈரப்பதத்தோடு வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.


மேலும் மண் பானையில் தண்ணீர் ஊற்றி அதிலிருந்து தண்ணீரை குடித்து வருவதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்

ஸ்பிரே பாட்டில் :

ஸ்ப்ரே பாட்டிலில் சில்லென்ற தண்ணீர் நிரப்பி ஒவ்வொரு ஜன்னலில் இருக்கும் கர்டெய்னில் ஸ்பிரே செய்து வர , வெளியில் இருந்து வெப்பக்காற்றை குளிர்ந்த காற்றாக மாற்றும் . இப்படி ஸ்ப்ரேயில் குளிர்ந்த தண்ணீர் ஊற்றும் போது சில துளி ரூம் ஸ்பிரே அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்தால் குளிர்ந்த காற்றோடு நறுமணமும் சேர்ந்து வரும்.

சீலிங் ஃபேன் மற்றும் டேபிள் ஃபேன்:

வீட்டில் உள்ள சீலிங் ஃபேன், டேபிள் ஃபேன் இரண்டையும் ஒரே நேரத்தில் உபயோகித்தால், சீலிங் ஃபேன் காற்றை அறை முழுதும் பரப்பும், டேபிள் ஃபேன் எல்லா திசைகளிலும் இந்த காற்றை சுழல செய்யும். இவ்வாறு செய்தால் ரூமின் ஏர் சர்குலேசன் சரி செய்யும்.

கோடைக்காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா !

ஐஸ் கட்டிகள்:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதனை ஃபிரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக மாற்றி அதனை வீட்டில் இருக்கும் டேபிள் ஃபேன் முன்பு வைத்து விட வேண்டும். டேபிள் ஃபேன்னில் இருந்து வரும் காற்று நமக்கு குளுமையான காற்றை தரும்.

ஏர் கூலர்:

உங்கள் வீட்டில் ஏர் கூலர் இருந்தால் இந்த ஐஸ் கட்டிகளை போட்டு உபயோகித்தால் அதில் வரும் சில்லென்ற காற்று அந்த அறை முழவதும் ஈரத் தன்மையான காற்றை வழங்கும்.

கதவு மற்றும் ஜன்னல்கள்:

சம்மர் காலத்தில் வீட்டில் இருக்கும் கதவு மற்றும் ஜன்னல்களை கூடுமானவரை திறந்து வைத்துக் கொள்வது சிறப்பு. குறிப்பிட்டு சொன்னால் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை ஜன்னல் கதவுகளை திறந்து வைப்பது சிறப்பு. அதிகாலையான காலை 3 முதல் 7 மணி வரை குளிர்ந்த காற்று உங்கள் வீட்டை குளுகுளுவென்று வைத்துக் கொள்ளும்.

வீட்டில் கொசுத் தொல்லை இருப்பவர்கள் கொசு வலை போட்டு ஜன்னல் கதவை திறந்து வைக்கலாம். மேலும் ஜன்னல்களில் வெள்ளை நிற கர்டெய்ன் போட்டு வைத்தால் சூரியனிலிருந்து வரும் அதிக வெப்பத்தை தடுத்து நிறுத்தும்.

இந்த எளிய வழிமுறைகளை நீங்களும் பின்பற்றி உங்களது வீட்டை குளுகுளுவென்று வைத்துக் கொண்டு சம்மரில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்.

click me!