இப்போது என் கணவர் துணையுடன் தொழில் செய்து வருகிறேன். முதன்முதலில் 2003ம் ஆண்டு வெறும் ரூ.3000 ரூபாயில் தொழிலை ஆரம்பித்தேன். தினமும் காலையில் தலையில் துணியுடன் ஊர் ஊராகச் சென்று விற்று மாலையில் வீடு திரும்புவது என் வழக்கம்.
ஒரு கட்டத்தில், நானே ஆடைகளை தயாரித்து விற்கவேண்டும் என நினைத்த போது தான் மகளிர் சுய உதவிக்குழுக்களை நாடினேன். கைவினைக் கலைஞர்களிடம் இருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளை பெற்று நானே ஆடைகளை தயாரிக்க ஆரம்பித்தேன். இன்று, கடவுளின் அருளால் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறேன். என் சேவையின் பலனாக ஒரு முறை அரசாங்கமும் எனக்கு ரூ.50,000 நிதியுதவி மானியம் வழங்கியது.
இப்போது எனது ஆடைத் தொழில், டெல்லி, சென்னை, பாட்னா, மும்பை, உத்தரகாண்ட், டேராடூன், போன்று பிரபலமான அனைத்து நரங்களிலும் பரந்து விரிந்துள்ளது. இந்த என் வளர்ச்சிக்கு என் குழு தான் முழுமுதற் காரணம். அவர்களுக்கு நான் கடமைபட்டுள்ளேன்.