protein: புரதச்சத்து நினைச்சத விட அதிகம் கிடைக்கணுமா? காலையில் இந்த உணவுகள் போதும்..!

First Published | Mar 21, 2023, 7:40 AM IST

protein breakfast: புரதச்சத்து அதிகமாக கிடைக்க தினமும் காலை உணவில் சில உணவுகளை தவறாமல் உண்ண வேண்டும். 

புரதச்சத்து அதிகம் காணப்படும் உணவுகளில் அமினோ அமிலங்கள் மிகுந்து காணப்படுகின்றன. நம் உடலில் இருக்கும் அனைத்து செல்களிலும் புரதங்கள் காணப்படுகின்றன. இந்த முக்கிய சத்து உடலின் திசுக்களுடைய வளர்ச்சிக்கு  ஆதரவாக  செயல்படும்.  ஹார்மோன் சமநிலை,  என்சைம்களின் உற்பத்தியை சரிப்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை நன்றாக வைத்திருக்க உதவும். 

காலை உணவு ரொம்ப முக்கியம். ஒருநாள் முழுக்க நன்கு ஆற்றலுடன்  தெம்பாகச்  செயல்பட  காலை உணவு தான் உதவியாக இருக்கும். காலை உணவை உண்பதில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். நாம் உண்ணும் காலை உணவு தான் நமது ரத்தத்தின் குளுக்கோஸ் அளவைப் பராமரிக்கும். இத்தகைய காலை உணவை கவனமாக உண்ண வேண்டும். புரத உணவுகள் எப்போது மெதுவாக தான் செரிமானம் ஆகும். இதனால் பசி தாங்க முடியும். 

Tap to resize

தயிர், சீஸ்..!

யோகர்ட் எனும் தயிர், சீஸ் ஆகியவற்றில் புரதச்சத்து ரொம்ப உள்ளது.  ஆனாலும் இந்த உணவுகளில் கொழுப்புச் சத்து கூட இருக்கிறது. எனவே அளவாகத் தான் உண்ண வேண்டும். பால் பொருட்களை உண்ணும் போது 10 கிராம் அளவுக்குப் புரதம் கிடைக்கிறது. 

முட்டை 

புரதங்கள் அதிகம் கொண்ட முட்டை காலை உணவுக்கு ஏற்றது. காலை வேளையில் 2 பிரட் துண்டுகள், கொஞ்சம் பழங்கள் கூடவே 2 முட்டை சாப்பிட்டால் நிறைவாக இருக்கும். அவித்த முட்டைகள் நல்லது. இது மதியம் வரை உங்களுடைய பசியை கட்டுப்பாட்டிற்கு வைக்கும்.   

காலையில் உண்ணும் இட்லி, தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுக்கு பின் முளைக்கட்டிய பயிர் வகைகளை உண்ண வேண்டும். அதனால் புரதச்சத்து தவிரவும் நிறைய சத்துக்கள் கிடைக்கும். வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. 

நட்ஸ் 

பாதாம், வால்நட், பிஸ்தா போன்றவை காலை உணவாக எடுத்துக் கொண்டால் ரொம்ப நேரம் பசிக்காமல் இருக்கும்.  நட்ஸ் வகையை பொறுத்தவரை அதில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம் காணப்படுகிறது. இதை உண்பதால் அநாவசியமாக அதிக கலோரிகள் உண்பதைத் தவிர்க்கலாம். 

இதையும் படிங்க: navel: தொப்புளில் இரவு தூங்கும் முன் எண்ணெய் தடவிக் கொண்டால் இத்தனை நன்மைகளா? நிரூபிக்கப்பட்ட உண்மை!!

மக்காச்சோளம் 

மக்காச்சோளத்தின் சுவை பலருக்கும் பிடிக்கும். நீங்கள் 100 கிராம் மக்காச்சோளம் சாப்பிட்டால் 3.2 கிராம் புரதச்சத்து கிடைக்கும். சுவையும் அலாதியாக இருக்கும் அதே நேரம் சத்தும் கிடைக்கும். நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கு உதவும். 

இதையும் படிங்க: Curd: வெறும் தயிர் இல்லைங்க.. தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சுபகாரியம் நடக்குமாம் தெரியுமா?

Latest Videos

click me!