Curd: வெறும் தயிர் இல்லைங்க.. தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சுபகாரியம் நடக்குமாம் தெரியுமா?

First Published Mar 20, 2023, 5:54 PM IST

Curd with Sugar Benefits: சர்க்கரையுடன் தயிர் சேர்ப்பதற்கும், சுப காரியங்களுக்கும் என்ன தொடர்பு என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

தயிரில் புரதம், கால்சியம், புரோபயாடிக்குகள் அதிகம் இருக்கின்றன. இதை எடுத்து கொள்வதால் செரிமான மண்டலம் மேம்படும். பாக்டீரியா தொற்றைத் தடுத்து குடல் ஆரோக்கியத்தையும் நன்கு பராமரிக்கும். தயிரை உண்ணும்போது உடல் எடையை கூட குறைக்கலாம். இதில் கெட்ட கொழுப்புகள் குறைவாக உள்ளது. நார்ச்சத்து அதிகமாக உள்ளது. கலோரிகள் கூட குறைவாக இருக்கிறது. இந்த கோடையில் தயிரை உண்பது ரொம்ப நல்லது.  

தயிரில், சர்க்கரை கலந்து உண்பதை உடல் எடை அதிகரிக்க பலரும் எடுத்து கொள்வார்கள். இப்படி உண்பது கோடைகாலத்திற்கு ஏற்றது. வடமாநிலங்களில் இந்த பானத்தை எந்த ஒரு சுப காரியத்தையும் செய்வதற்கு முன் சாப்பிடுவார்கள். அது நல்ல விஷயமாகக் கருதப்படுகிறது. தயிரும் சர்க்கரையும் சேர்த்து உண்பது உண்மையில் அவ்வளவு நல்லதா? சுபகாரியத்தைச் செய்வதற்கு முன் தயிர் சர்க்கரை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

ஜோதிட காரணம் 

ஜோதிடத்தில், வெள்ளை விஷயங்கள் சந்திரனுடன் தொடர்புடையவை.  தயிர் சர்க்கரையும் வெண்மையானது, எனவே எந்த ஒரு சுப காரியத்தையும் செய்வதற்கு முன்பும் தயிர், சர்க்கரையைச் சாப்பிடுவது நபரின் மனதை ஒருமுகப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இதை சாப்பிட்டு வேலையை தொடங்கினால் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியுமாம். வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. 

செவ்வாய் கிரகமும் வெள்ளை நிறத்துடன் தொடர்புடையது, இது அமைதியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் தயிர்-சர்க்கரை சாப்பிடுகிறார்கள். இது நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்கிறது. 

அறிவியல் காரணம் 

தயிர், சர்க்கரை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், அதில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது நம் உடலை உற்சாகப்படுத்துகிறது. தயிர், சர்க்கரை சாப்பிடுவதால் உடலுக்கு குளுக்கோஸ் கிடைக்கிறது. நாள் முழுக்க ஆற்றலோடு செயல்பட உங்களுக்கு உதவும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். 

click me!