செம்பருத்தி பூவில் பல மருத்துவ குணங்கள் மறைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். செம்பருத்தி பூ நம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நாள்தோறும் செம்பருத்தி தேநீர் குடிப்பதால் ரத்த அழுத்தம் குறையும். நம் தமனிகளில் அழுத்தத்தைக் குறைக்கிறது. செம்பருத்திப் பூக்களில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற பைட்டோ கெமிக்கல்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
செம்பருத்தி பூக்களின் இதழ்களை பறித்து அதை 200 மி.லி. நீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். இதை காலையில் அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். ஒற்றைத் தலைவலி, முகப்பருக்கள், அசிடிட்டி, அல்சர், இரத்தக் கசிவு பிரச்சினைகள் ஆகியவை செம்பருத்தி பூ டீ குடித்தால் குணமாகும்.
செம்பருத்தி பூவுடைய சாறுடன், அதே அளவு தேங்காய் எண்ணெய் கலந்து வாணலியில் போட்டு நன்கு காய்ச்சி அதனை வடிகட்டி கொள்ளுங்கள். அதனை கண்ணாடி பாட்டில்களில் பாதுகாப்பாக வையுங்கள். இதனை நாள்தோறும் தலையில் தடவி வர தலைமுடி காடு மாதிரி அடர்த்தியாக வளர்வதை காண்பீர்கள்.