Happy Ugadi 2023 Wishes: உகாதி பண்டிகையில் இந்த வாழ்த்துகளை அனுப்பி அசத்துங்கள்..!

Published : Mar 21, 2023, 07:01 PM IST

உகாதி பண்டிகை மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எந்த காரியம் தொடங்கினாலும் அது சிறந்து விளங்கும் என்பது ஐதீகம். 

PREV
16
Happy Ugadi 2023 Wishes: உகாதி பண்டிகையில் இந்த வாழ்த்துகளை அனுப்பி அசத்துங்கள்..!

உகாதி அல்லது யுகாதி  என அறியப்படும் பண்டிகை தெலுங்கு வருடப்  பிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த  பண்டிகை  விமரிசையாக  கொண்டாடப்படும். இந்து சாஸ்திரங்களின்படி பிரம்மதேவன் தன்னுடைய  படைப்புத் தொழில்  தொடங்கிய நாள் தான் உகாதி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

26

தமிழ், மலையாள மாதங்கள் எப்படி சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறதோ, அதைப்போலவே தெலுங்கு, கன்னட மொழியின் மாதங்கள் நிலவின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. அப்படிப்பட்ட தெலுங்கு வருடப்பிறப்பு நாளை தான் உகாதி பண்டிகை என்கிறார்கள். 

இந்த நாளில் தமிழ் புத்தாண்டைப் போலவே பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். இந்த நாளில் வீட்டில் கோலங்களும், மாவிலை தோரணங்களும் களைகட்டும். தெலுங்கு வருடப்பிறப்பு மட்டுமில்லாமல் உகாதி பண்டிகை இறைவழிபாட்டிற்கும் ஏற்ற நாள் தான். இந்த நாளில் விநாயகரை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். 

36

உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பக்கூடிய உகாதி வாழ்த்துகள் இதோ..! 

• இந்தாண்டு உகாதி பண்டிகை உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுப்புகிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய உகாதி வாழ்த்துக்கள். 

• மகிழ்ச்சி, செழுமையின் பாதையில் பயணிக்க உங்களுக்கு உகாதி வாழ்த்துக்கள்! 

• உகாதியின் இந்த மங்களகரமான தருணத்தில், உங்கள் ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! விநாயகப் பெருமான் உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றட்டும்!

46

• மிகுந்த நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் உகாதியை வரவேற்போம். வரும்காலங்களில் ஏராளமான மகிழ்ச்சி, நிறைவு, அமைதி, செல்வம் கிடைக்கும் என நம்புவோம். உகாதி வாழ்த்துக்கள். 

• உகாதியில் ஏற்றும் விளக்குகளை போல உங்கள் வாழ்க்கையில் பிரகாசம் வரட்டும். உங்களுக்கு உகாதி வாழ்த்துக்கள்.

• உகாதி பண்டிகையில் உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும், நீங்கள் விரும்பியபடி விஷயங்கள் நடக்கட்டும். இந்த புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் செழிப்பின் வருகையை அறிவிக்கட்டும். இனிய உகாதி! 

56

• மாம்பழம், வேப்பம்பூ, வெல்லம் ஆகியவற்றின் சுவை உங்கள் வாழ்வின் அனைத்து கசப்புகளையும் நீக்கி, உங்கள் வாழ்க்கையில் இனிப்பு சுவைகளை சேர்க்கட்டும். இனிய உகாதி! 

• பொறாமைப்படாமல் போற்றக் கற்றுக்கொண்டவன் அதிர்ஷ்டசாலி. செழிப்பான உகாதி வாழ்த்துகள்.  

இதையும் படிங்க: உகாதி பண்டிகை.. இதை மட்டுமே செய்தால் போதும்.. வறுமை நீங்கி வாழ்க்கை செழிப்பாக மாறும்..!

 

66

• இனிப்பு, புளிப்பு எல்லாம் கலந்த உகாதி பச்சடி போல, இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். இந்த உகாதி பண்டிகையில், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இனிய உகாதி! 

இதையும் படிங்க: நம்ம கூடவே இருந்து குழி பறிக்கும், துரோகிகளின் சூழ்ச்சியில் சிக்காமல் இருக்க..சரபேஸ்வரரை எப்படி வழிபட வேண்டும்

click me!

Recommended Stories