பெருங்காயம் என்பது சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலா பொருள். தனித்துவமான வாசனை, செரிமான பண்புகளுக்காக சமையல் அறையில் பல நூற்றாண்டுகளாக இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். இதன் பயன்பாட்டின் தேவை அதிகமாக உள்ளதால் சந்தையில் போலியான பெருங்காயம் அதிகமாக விற்கப்படுகிறது. போலியான பெருங்காயம் உணவின் சுவையில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அதன் முழு ஆரோக்கிய நன்மைகளும் பெற முடியாமல் போகும். எனவே, இந்த பதிவில் போலியான பெருங்காயத்தை கண்டறிவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
26
வாசனை
ஒரிஜினல் பெருங்காயம் வலுவான மற்றும் கடுமையானயாக இருக்கும். எந்த அளவிற்கு என்றால் அதன் டப்பாவை திறக்கும் போது அதன் வாசனை ஆனது வீடு முழுவதும் பரவும். ஆனால் போலியான அல்லது கலப்படம் உள்ள பெருங்காயத்தில் இந்த வாசனை இருக்காது. எனவே பெருங்காயத்தை வாங்கும் முன் அதன் வாசனையை சோதித்து பார்த்து வாங்கவும்.
36
தண்ணீரில் கரைத்து பார்
சூடான நீரில் பெருங்காயத்தை கலக்கும் போது எந்தவித துகள்கள் இல்லாமல் முழுவதும் கரைந்தால் அது ஒரிஜினல் பெருங்காயம். ஒருவேளை அதில் ஏதேனும் துகள்களை நீங்கள் கண்டால் அது போலி பெருங்காயம் என்று அர்த்தம்.
ஒரிஜினல் பெருங்காயம் ஒட்டக்கூடிய தன்மை மற்றும் மென்மையானது. ஒருவேளை நீங்கள் வாங்கிய பெருங்காயத்தூள் ரொம்பவே பொடியாக, உணர்ந்ததாக இருந்தால் அது போலி பெருங்காயம் ஆகும்.
56
நெருப்பில் சுட்டுப்பார்
ஒரு ஸ்பூனில் சிறிதளவு பெருங்காயத்தை எடுத்து அதை நெருப்பில் சுட்டுப் பார்க்கவும். உண்மையான பெருங்காயம் உருகும் மற்றும் தனித்துவமான வாசனையை வெளியிடும். அதுவே துர்நாற்றம் வீசினாலோ அல்லது தூசிகள் இஞ்சி இருந்தாலோ அது கலப்படம் அல்லது போலிப் பெருங்காயம் ஆகும்.
66
பேக்கேஜை பார்
ஒரிஜினல் பெருங்காயத்தை வாங்க விரும்பினால் நீங்கள் அறிந்த மற்றும் உண்மையான பிராண்டுகள் தயாரித்தை வாங்குங்கள். ஏனெனில் அவர்கள் பேக் கேஜிங்களில் உண்மையானது அல்லது 100% தூய்மையானது போன்ற லேபில்களை ஒட்டி இருப்பார்கள். உங்களுக்கு தெரியாத கம்பெனிகள் தயாரிக்கும் பெருங்காயத்தை ஒருபோதும் வாங்காதீர்கள். ஏனெனில் கலப்படம் செய்யப்பட்ட பெருங்காயத்தை அவர்கள் விற்க வாய்ப்பு அதிகம் உள்ளது.