Cleaning Tips: இரும்பு பீரோவில் விடாப்பிடியான கறையா? சுலபமாக பளபளக்க வைக்க 'சூப்பர்' டிப்ஸ்!

Published : Jul 09, 2026, 06:35 PM IST

How To Clean Stains Iron Almirah: இரும்பு பீரோவை தினமும் பயன்படுத்துவதால், அதில் கறைகள் படிவது சகஜம். இந்த கறைகளை எளிதாக நீக்க முடியாதா? கவலையே வேண்டாம், சில எளிய வீட்டுக்குறிப்புகளை வைத்து பீரோவை பளிச்சென்று மாற்றலாம்.

PREV
14
How To Clean Stains Iron Almirah

வீட்டில் இருக்கும் இரும்பு பீரோவை துணி மற்றும் முக்கியமான பொருட்களை வைக்க பயன்படுத்துகிறோம். தினமும் திறந்து மூடுவதால், அதன் மீது கைரேகை, தூசி, துரு மற்றும் பிற கறைகள் படிய ஆரம்பிக்கின்றன. ஆரம்பத்தில் இதை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, இந்த அழுக்குகள் இறுகி, கறைகளை நீக்குவது கடினமாகிவிடும். ஆனால் கவலை வேண்டாம், சில எளிய வீட்டுக்குறிப்புகள் மூலம் இதை எளிதாக சுத்தம் செய்யலாம்.

இதையும் படிங்க: Water Bottle Cleaning: வாட்டர் பாட்டிலில் ஒரே துர்நாற்றமா? 'இந்த' 2 பொருள் போதும்! புதுசு போல ஜொலிக்கும்!

24
வினிகர் மற்றும் தண்ணீர் வைத்தியம்

வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை கறைகள் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து 5-10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பிறகு, மென்மையான ஸ்பாஞ்ச் அல்லது சுத்தமான பருத்தித் துணியால் லேசாகத் தேய்த்து சுத்தம் செய்யுங்கள். கடைசியாக காய்ந்த துணியால் துடைத்தால், பீரோவின் பளபளப்பு திரும்பக் கிடைக்கும்.

இதையும் படிங்க: ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடா வச்சா இவ்ளோ நடக்குமா? 30 நிமிடத்தில் புத்தம் புதுசாக மாறும் மேஜிக்!

34
பேக்கிங் சோடா

இரும்பு பீரோவில் உள்ள பழைய, பிடிவாதமான கறைகளை நீக்க பேக்கிங் சோடா ஒரு சிறந்த வழி. 2-3 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை கறை உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடங்கள் காய விடுங்கள். பின்னர், மென்மையான ஸ்பாஞ்ச் அல்லது துணியால் மெதுவாகத் தேய்த்து, ஈரத்துணியால் துடைத்து எடுங்கள். இதனால் எண்ணெய் பிசுக்கு கறைகள் கூட சுத்தமாகிவிடும்.

இதையும் படிங்க: வெறும் ரூ.300-ல் தரமான ஸ்டீல் ரேக்! இனி உங்க கிச்சன் கசகசன்னு இருக்காது!

44
சோப்பு வைத்தும் சுத்தம் செய்யலாம்
பீரோவில் சாதாரண தூசியும் அழுக்கும் இருந்தால், சோப்புத் தண்ணீர் கொண்டே சுத்தம் செய்யலாம். ஒரு பக்கெட்டில் சிறிது வெதுவெதுப்பான நீரில், சில துளிகள் லிக்விட் டிஷ்வாஷ் அல்லது மைல்டான லிக்விட் சோப்பைக் கலக்கவும். இந்தக் கரைசலில் மென்மையான துணியை நனைத்து, நன்றாகப் பிழிந்து, பீரோவை மேலிருந்து கீழாகத் துடைக்கவும். தேவைப்பட்டால் ஸ்பாஞ்ச் கொண்டு லேசாக தேய்க்கலாம். பிறகு, சுத்தமான ஈரத்துணியால் துடைத்து, கடைசியாக உலர்ந்த துணியால் துடைத்தால் போதும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories