Gas Burner Cleaning : வீட்டுல கேஸ் ரொம்ப செலவாகுதா? பர்னரை இப்படி சுத்தம் பண்ணுங்க

Published : Jul 01, 2025, 05:36 PM IST

வீடுகளில் உள்ள கேஸ் அடுப்பின் பர்னர்கள் அடைத்துக் கொண்டால் அவை சரியாக எரிவதில்லை. இதன் காரணமாக உணவு சமைக்க அதிக நேரம் எடுப்பதுடன் கேஸ் அதிக அளவில் வீணாகிறது. கேஸ் பர்னர்களை சுத்தம் செய்யும் முறை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
15
How to clean gas burners? Simple Methods

கேஸ் அடுப்புகளில் பயன்படுத்தப்படும் பர்னர்களில் அழுக்குகள், எண்ணெய் பிசுக்குகள் சேரும்பொழுது அதில் அடைப்புகள் ஏற்படுகின்றன. இதனால் கேஸ் சீராக வெளியாவது இல்லை. இதன் காரணமாக சமைக்கும் நேரம் அதிகரிப்பதுடன், அதிக கேஸ் செலவாகிறது. பர்னர்களை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் அடைப்புகள் நீக்கப்பட்டு கேஸ் முழுமையாக எரியும். இதனால் சமையல் விரைவாக முடிவடைவதுடன், ஒரு மாதத்திற்கு 15 நாட்கள் வரை காஸ் சிலிண்டரை கூடுதலாக சேமிக்க முடியும். கேஸ் பர்னர்களை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

25
ஈனோ மூலம் பர்னர் சுத்தப்படுத்தும் முறை

பர்னர்களில் படியும் எண்ணெய் பிசுக்குகளே அடைப்புக்கு முக்கிய காரணமாகிறது. எனவே எண்ணெய் பிசுக்குகளை நீக்கினாலே பாதி பிரச்சனை சரியாகிவிடும். முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கேஸ் பர்னர்களை வைத்து அதில் கொதிக்கும் தண்ணீரை ஊற்ற வேண்டும். இந்த பாத்திரத்தில் ஒரு முழு எலுமிச்சை சாறையும் பிழிய வேண்டும். அதனுடன் ஒரு பாக்கெட் ஈனோ பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். இதன் காரணமாக தண்ணீர் சோடா போல பொங்கத் துவங்கும். இந்த கலவையில் இரவு முழுவதும் பர்னர்களை ஊற விட வேண்டும். மறுநாள் காலை திறந்து பார்க்கும் பொழுது நீரின் நிறம் மாறி இருப்பதையும், அதில் இருக்கும் அழுக்குகள், எண்ணெய் பிசுக்குகள் பிரிந்து வந்திருப்பதையும், பர்னர்கள் ஓரளவுக்கு சுத்தமாக இருப்பதையும் உங்களால் பார்க்க முடியும்.

35
வினிகர் மூலம் பர்னர் சுத்தப்படுத்தும் முறை

மறுநாள் காலை பர்னர்களை வெளியில் எடுத்து சாதாரண நீரில் கழுவ வேண்டும். இப்போது பர்னர்கள் பார்ப்பதற்கு சுத்தமாக இருக்கும். இரண்டாவது முறையில் அதேபோல ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் சூடான தண்ணீர் ஊற்றி பாதியளவு வினிகரை சேர்த்து அதில் பர்னர்களை அதில் போட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் பர்னர்களை வெளியில் எடுத்து ஒரு சிறிய துண்டு புளி அல்லது கம்பி்நார் கொண்டு பர்னர்களை தேய்க்கலாம். இதன் காரணமாக அழுக்குகள் எளிதாக நீங்கிவிடும். அப்படியும் அழுக்குகள் நீங்கவில்லை என்றால் ஒரு சிறிய குண்டூசியை எடுத்து ஒவ்வொரு துளையிலும் நன்றாக குத்தி விட வேண்டும். அதன் பின்னர் குழாயை திறந்து அதில் பர்னரை காட்டினால் உள்ளே இருக்கும் அழுக்குகள் வெளியில் சுலபமாக வந்துவிடும்.

45
பேக்கிங் சோடா மூலம் பர்னர் சுத்தப்படுத்தும் முறை

மற்றொரு முறையில் ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு முதல் மூன்று ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து பாத்திரம் தேய்க்கும் டிஷ் வாஷ் சோப்பையும் சேர்க்க வேண்டும். இதனுடன் எலுமிச்சை பழச்சாற்றை பிழியவேண்டும். இந்தக் கரைசலில் பர்னர்களை குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து, பின்னர் ஒரு பழைய டூத் பேஸ்ட் கொண்டு தேய்த்துக் கழுவினால் அழுக்குகள் வெளியில் வந்துவிடும். சுத்தமான நீரில் பர்னர்களை கழுவி துணியால் துடைத்து நன்கு உலர விட்டு பின்னர் மீண்டும் அடுப்பில் பொருத்த வேண்டும். இல்லை என்றால் தீ சரியாக எரியாது.

55
உங்கள் பணத்தை மிச்சப்படுத்துங்கள்

மாதம் ஒருமுறையாவது பர்னர்களை இதுபோல ஆழமாக சுத்தம் செய்ய வேண்டும். இது பர்னர்கள் அடைபடுவதை தடுக்கும். சமையல் முடிந்ததும் ஈரத்துணியால் துடைப்பது சிறிய கறைகள் படிவதை தடுக்கும். இந்த முறைகளை பயன்படுத்தி கேஸ் பர்னர்களை எளிதாகவும், திறமையாகவும் சுத்தம் செய்யலாம். இது அடுப்பின் ஆயுளை நீட்டிப்பதோடு, கேஸ் அதிகமாக வீணாவதையும் தடுக்கிறது. இதன் காரணமாக 15 நாட்கள் வரை கூடுதலாக உங்கள் சிலிண்டரை நீங்கள் பயன்படுத்தலாம். சமையல் விரைவாக முடிவதுடன், உங்கள் பணமும் மிச்சமாகும். அடிக்கடி சிலிண்டர் வாங்கும் தேவையும் இருக்காது.

Read more Photos on
click me!

Recommended Stories