இலவங்கப்பட்டை மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இலவங்கப்பட்டை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் எத்தனையோ மசாலாப் பொருட்கள் உணவில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மருத்துவ குணங்கள் கொண்டவை. அந்த வகையில் இலவங்கப்பட்டையிலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இலவங்கப்பட்டை உணவில் மட்டுமல்லாமல் பாரம்பரிய மருத்துவத்திலும் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலவங்கப்பட்டையை கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
26
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது
சர்க்கரை நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை தேநீர் சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதால், உடலின் செல்கள் இன்சுலினுக்கு சிறந்த முறையில் பதில் அளிப்பதை உறுதி செய்கிறது. ரத்தத்திலிருந்து சர்க்கரையை உறிஞ்சி அதன் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவி புரிகிறது. குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இலவங்கப்பட்டையால் செய்யப்படும் தேநீரை அடிக்கடி குடித்து வரலாம். குறிப்பாக காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த தேநீரை குடிக்கலாம்.
36
செரிமானக் கோளாறுகளை நீக்கும் இலவங்கப்பட்டை தேநீர்
இலவங்கப்பட்டை ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த ஒரு பொருளாகும். இது உடலை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்க்கு எதிராக போராடி செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை வெகுவாக குறைக்கும். மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவக் கால தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்க உதவுகிறது. இலவங்கப்பட்டை தேநீர் செரிமான மண்டலத்திற்கு நன்மை பயக்கும். அஜீரணம், வாய்வு கோளாறுகள், வீக்கம் போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது. வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் கரைந்து எடை இழப்புக்கும் வழிவகுக்கிறது.
இலவங்கப்பட்டை தேநீரை குடிப்பவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இதன் காரணமாக நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. ரத்தநாளங்கள் வலுப்படுத்துவதால் இரத்த அழுத்தம் குறைந்து இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் குறைகிறது. இலவங்கப்பட்டையில் இருக்கும் சில சேர்மங்கள் ரத்தநாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இதன் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு அபாயம் குறைவதாக சில ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, தசை பிடிப்பு, குமட்டல், வாந்தி போன்ற அசௌகரியங்களையும் குறைக்க இலவங்கப்பட்டை தேநீர் பயன்படுகிறது.
56
இலவங்கப்பட்டை தேநீர் தயாரிப்பது எப்படி?
இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் வலிகளைப் போக்கி மாதவிடாய் காலத்தை எளிதாக்க உதவுகின்றன. இது கர்ப்பப்பை சுற்றி உள்ள தசைகளை தளர்த்தி வலியை குறைப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் இலவங்கப்பட்டை குச்சி அல்லது அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை சேர்க்கவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். ஆறியதும் இறக்கி வடிகட்டி தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். சர்க்கரை நோயாளிகள் தேன், நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து குடித்து வரலாம்.
66
மருத்துவ ஆலோசனைக்குப் பின் எடுப்பது நல்லது
இலவங்கப்பட்டை ஆரோக்கியமான நன்மைகளை கொண்டிருந்தாலும், அதை அளவுடன் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டையில் கூமாரின் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இதை அதிக அளவில் உட்கொள்ளும் பொழுது சிலருக்கு கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நீண்ட கால நோய்களுக்கு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.