வீடு மட்டுமல்ல சமையலறையும் சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம். சமயலறை சுத்தமாக இல்லை என்றால் சில சமயங்களில் உணவு விஷமாக மாறும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். அதுவும் குறிப்பாக உணவுப் பொருட்களை முறையாக சேமிக்காவிட்டால் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அவற்றில் வளரும். ஆகவேதான், சமையல் பொருட்களை சேமிக்கும் போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அது என்ன என்று இப்போது இங்கு பார்க்கலாம்.
25
இப்படி வைத்தால் உணவு கெட்டுப்போகும்!
பொதுவாக சமைத்த உணவுகளை அறையின் வெப்பநிலையிலே வைப்பது தான் சரி என்று நாம் நினைப்போம் இருப்பினும் சில சமயங்களில் உணவு கெட்டுப் போக கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே ஏதேனும் உணவு விரைவில் கெட்டுப் போக கூடுமானால் அந்த உணவில் மீதமானதை ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கவும். அதுவும் ஐந்து டிகிரி குறைவாகவே.
35
ஒன்றாக சேமிக்காதே!
பச்சை இறைச்சியில் இருக்கும் பாக்டீரியாக்கள் உணவு விஷமாக மாறுவதற்கு வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே அவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் ஒன்றாக சேர்த்து வைக்காமல் தனியாக சேமிக்க வைப்பது தான் நல்லது. அதுபோல சமையல் பாத்திரங்கள் மற்றும் கரண்டிகளை சுத்தமாக கழுவாவிட்டால் உணவு விரைவில் கெட்டுப் போகக் கூடும் என்கின்றர் நிபுணர்கள்.
சமைப்பதற்கு மற்றும் சாப்பிடுவதற்கு முன்பாக கைகளை நன்கு கழுவ வேண்டும். சமைத்த அல்லது மீதமான உணவை மூடி வைப்பது ரொம்பவே முக்கியம். முக்கியமாக சமைப்பதற்கு முன் மற்றும் பின் சமையலறை மேடையை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.
55
இந்த தவறை செய்யாதே!
உணவை ஒருபோதும் பச்சையாக சாப்பிடக்கூடாது. நன்கு சமைத்து தான் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சமைப்பதன் மூலம் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது. அதுபோல கீரை, பிரக்கோலி காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை முதலில் மஞ்சள் மற்றும் உப்பு நீரில் சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு கழுவி பயன்படுத்துங்கள்.