Snakes : பாம்புகள் மீது பயம் இயல்பானதே என்றாலும், அவை நோய்களைத் தடுத்தும், விவசாயத்தைக் காத்தும் மறைமுகமாக நமக்கு உதவுகின்றன. இயற்கையைப் பாதுகாப்பதில் பாம்புகளின் பங்கு மிக முக்கியமானது.
பாம்பைக் கண்டால் அடித்துக் கொல்லத் தோன்றும் அளவுக்குப் பலருக்கும் பயம் இயல்பானதே. ஆனால், பாம்புகள் இல்லாவிட்டால் மனிதர்களுக்கு ஏராளமான ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக, எலி போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பாம்புகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
எலி, தவளை மற்றும் பல்லிகளே பாம்புகளின் முக்கிய உணவாகும். இதனால் விவசாய நிலங்களில் எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் அவை கட்டுப்படுத்துகின்றன. ஒரு பாம்பு ஒரு ஆண்டில் நூற்றுக்கணக்கான எலிகளை வேட்டையாடும் திறன் கொண்டது. பாம்புகளின் எண்ணிக்கை குறைந்தால், எலிகள் பயிர்களை நாசமாக்கிவிடும். இதன் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பைப் பாம்புகள் அளிக்கின்றன.
எலிகள் பயிர்களைத் உண்பதுடன், பிளேக், லைம் நோய், ஹன்டாவைரஸ் மற்றும் ராக்கி மவுன்டன் ஸ்பாட்டட் ஃபீவர் போன்ற பல கொடிய நோய்களையும் பரப்புகின்றன. ஆய்வுகளின்படி, 'டிம்பர் ராட்டில்ஸ்னேக்' வகை பாம்புகள் எலிகளை வேட்டையாடுவதன் மூலம், ஒரு ஆண்டில் 2,500 முதல் 4,500 உண்ணிகளை அழிக்கின்றன. இவ்வாறு எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் பாம்புகள் நமது பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கின்றன.
மருத்துவத் துறையில் பாம்பு விஷத்தின் முக்கியத்துவம்
பாம்பு விஷம் உயிரை எடுக்குறது மட்டுமல்ல, உயிரைக் காப்பாத்தவும் உதவுது. பாம்புக்கடிக்கு மருந்தான 'ஆன்டி-வெனம்' தயாரிக்கிறதுக்கு பாம்பு விஷம்தான் முக்கியம். 'காப்பர்ஹெட்' பாம்பு விஷத்துல இருக்குற 'கான்டார்ட்ரோஸ்டாடின்' புரோட்டீன், கேன்சர் செல்கள் பரவாம தடுக்க உதவுதுன்னு ஆய்வுகள்ல கண்டுபிடிச்சிருக்காங்க. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கான மருந்து தயாரிப்புலயும் பாம்பு விஷம் பயன்படுது.
சுற்றுச்சூழல்ல பாம்பு வேட்டையாடும் பிராணியாகவும், அதே சமயம் கழுகு, கீரி போன்ற விலங்குகளுக்கு இரையாகவும் இருக்கு. எல்லா பாம்புகளும் விஷத்தன்மை கொண்டவை அல்ல. பெரும்பாலான பாம்புகள் மனுஷங்கள பார்த்தா பயந்து ஓடிடும். அதுக்கு ஆபத்துன்னு தெரிஞ்சா மட்டும்தான் தற்காப்புக்காக கடிக்கும். அதனால பாம்பை பார்த்தா கொல்லாம, வனத்துறைக்கோ இல்ல பாம்பு மீட்பாளர்களுக்கோ தகவல் கொடுக்குறதுதான் சரி.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.