How Often to Wash Clothes and Household Items: அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் துவைக்க வேண்டியது அவசியம். உள்ளாடைகள் துவங்கி, படுக்கை விரிப்புகள் வரை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பது முக்கியம். சுத்தம் என்பது நம் வீட்டில் இருந்து துவங்க வேண்டும். நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உள்ளாடைகள், ஆடைகள், போர்வைகள், தலையணை உறைகள் என அனைத்தையும் எந்த கால இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
உள்ளாடைகள் நம் சுகாதாரத்தை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும். அசுத்தமான உள்ளாடைகள் கடுமையான நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தும். உள்ளாடைகளைப் பொறுத்தவரை நாம் ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், அவற்றை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அந்தரங்க உறுப்புகளின் பாதுகாப்பு மற்றும் நோய் தொற்றிலிருந்து தப்பிப்பதற்கு ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் உள்ளாடைகளை துவைக்க வேண்டியது அவசியம்.
பல் துலக்க பயன்படும் பிரஷ் நம் வாயின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் வாய் வழியாக சென்று உடலில் தொற்றுக்களை ஏற்படுத்தலாம். மேலும் வாயில் துர்நாற்றம், ஈறுநோய், வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் பல் துலக்கும் பிரஷ்சை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிரஷ்சை மாற்ற வேண்டும். ஈரமான இடத்தில் வைத்தால் பாக்டீரியாக்கள் வளரும் என்பதால் நன்கு உலர வைக்க வேண்டியது அவசியம்.
நம் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது தலையணை உறைகள். இதை மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். நம் தலையில் இருக்கும் அழுக்குகள், தூங்கும் பொழுது ஏற்படும் வியர்வை ஆகியவை தலையணை உறையில் படிந்து முகப்பருக்கள் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக அடிக்கடி தொற்றுக்களும் ஏற்படலாம். எனவே தலையணை முறைகளை மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை துவைக்க வேண்டியது அவசியம். அதேபோல் தலையணைகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
510
போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகள்
நம் வியர்வை மற்றும் உமிழ்நீரால் தலையணை உறையில் அதிக அழுக்குகள் சேரக்கூடும். இதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பொழுது தலையில் தொற்றுகள், முடி உதிர்வு ஆகியவை பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே தலையணை உறைகளை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தலையணையை மாற்றி விடுவது நல்லது. அதேபோல் படுக்கை விரிப்புகள் பெட்ஷீடுகள் ஆகியவற்றை ஒரு மாதத்திற்கு ஒருமுறை துவைக்க வேண்டும். மிகவும் பழைய போர்வைகளை உடனடியாக மாற்றி விட வேண்டும். குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிய போர்வையை வாங்கிக் கொள்ளலாம்.
610
ஜீன்ஸ் பேண்ட்
சிலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து விட்டால் அதை பல வாரங்களுக்கு துவைக்காமல் பயன்படுத்துகின்றனர். ஆனால் அது தவறான முறையாகும். ஜீன்ஸ் பேண்ட்கள் அடிக்கடி துவைப்பதற்கு ஏதுவானவை இல்லை தான். இருப்பினும் இதை நான்கு முதல் ஐந்து முறை அணிந்த பிறகு கட்டாயம் துவைக்க வேண்டும்.
710
முகம் துடைக்கும் துண்டு
நாம் உடல் முகம் துடைக்க பயன்படுத்தும் துண்டு கிருமிகளை காந்தம் போல ஈர்த்து வைத்துக் கொள்ளும். எனவே துண்டை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை துவைத்து வெயிலில் உலர்த்தி, அதன் பின்னரே பயன்படுத்த வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை துண்டை மாற்ற வேண்டியது அவசியம்.
810
செல்போன்கள்
நாம் தினமும் பயன்படுத்தப்படும் செல்போன்களில் அழுக்குகள் மற்றும் பூஞ்சைகள் எளிதில் சேர்கின்றன. இவை கைகள் மூலம் நம் உடலுக்குப் பரவி சருமத்தொற்று, முகப்பரு பிரச்சனைகளை உருவாக்கலாம். எனவே தினமும் ஆல்கஹால் அடங்கிய கிருமி நாசினை துடைப்பான்கள் அல்லது மைக்ரோ ஃபைபர் துணி கொண்டு செல்போன்களை சுத்தம் செய்ய வேண்டும். குளியலறை, கழிவறை போன்ற இடங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
சமையலறை துணிகள்
சமையலறையில் சூடான பாத்திரங்களை எடுக்க பயன்படும் துணிகள் ஈரமாக இருப்பதால், இவை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளில் உறைவிடமாக மாறிவிடுகின்றன. எனவே இவற்றை சரியாக சுத்தம் செய்ய வேண்டும். சுடுநீரில் துவைத்து வெயிலில் உலர்த்த வேண்டும்.
910
தண்ணீர் பாட்டில்கள்
தண்ணீர் பாட்டில்கள், குவளைகளையும் ஒரு நாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரங்கள், குவளைகள் மற்றும் வாட்டர் பாட்டில்களை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஸ்டீல் பாட்டிலாக இருந்தால் சுடுநீரில் சோப்பு போட்டு கழுவி, பிரஷ் கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யலாம்.
1010
மருத்துவர்களின் அறிவுரை
மருத்துவர்களின் அறிவுரைப்படி அசுத்தமான பொருட்களால் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் நம் உடலுக்குள் செல்லும். இதன் காரணமாக சருமப் பிரச்சனைகள், தோல் நோய்கள், ஒவ்வாமை, வயிற்றுப் பிரச்சனைகள், வாந்தி, வயிற்றுப்போக்கு, சுவாசப் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். மேற்கூறிய எளிய பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் தொற்று நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.