
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் சர்க்கரை நோய் தாக்குகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சர்க்கரை நோயாளிகள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சில வாழ்க்கை முறை மாற்றங்களை கடைபிடிப்பது மிகவும் அவசியம். இதில் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், தினமும் உடற்பயிற்சி செய்வது போன்ற விஷயங்கள் அடங்கும்.
அந்தவகையில், உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வாக்கிங் செல்வது மிகவும் அவசியம். ஆகவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் எவ்வளவு தூரம் மற்றும் நேரம் நடக்க வேண்டும் என்றும், அதனால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: தினமும் காலை வெறும் 30 நிமிடம் வாக்கிங் போனா.. நீங்க கற்பனை செய்ய முடியாத நன்மைகள்!!
சர்க்கரை நோயாளிகளுக்கான வாக்கிங் :
சர்க்கரை நோயாளிகளின் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் வாக்கிங் செல்வது மிகவும் அவசியமானதாகும். எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் 1000 படிகள் நடந்தால் ரத்த சர்க்கரையை சுலபமாக கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு நடைபயிற்சி மட்டுமின்றி வழக்கமான உடல் செயல்பாடுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: தினமும் வாக்கிங் போறீங்களா? 'இத' செஞ்சுட்டு நடந்தா மட்டும் தான் நன்மை!!
எவ்வளவு நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டும்?
சர்க்கரை நோயாளிகள் ஏதாவது ஒரு உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் அவசியம். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் மிகவும் எளிதாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகளில் ஒன்று தான் நடை பயிற்சி. அதன்படி, அவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரம் படிகள் அல்லது சுமார் 30 நிமிடங்கள் ஆவது கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்வது சிறந்ததாகும்.
ஆனால் சிலருக்கு தொடர்ந்து 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது சிரமமாக இருக்கும். எனவே அவர்கள் காலை 10 நிமிடமும், மதியம் 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும் என்ற வகையில் பிரிந்து நடைப்பயிற்சி செய்யலாம். இருந்தாலும் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவைப் பொறுத்து அவர்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் :
1. சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வாக்கிங் சென்றால், அவர்களது உடலில் கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்தலாம் மற்றும் குறைக்கலாம்.
2. சர்க்கரை நோயாளிகள் வாக்கிங் செல்லும் போது அவர்களது தசைகள் சுருங்கும் மற்றும் இரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது.
3. சர்க்கரை நோயாளிகள் உணவுக்கு பிறகு சுமார் 30 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்து வந்தால் உடலில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்.
4. உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யப்படவிட்டால் இரத்த சர்க்கரை உயரும். எனவே இதை தவிர்க்க சர்க்கரை நோயாளிகள் தினமும் வாக்கிங் செல்வது மிகவும் நல்லது.