
மீனில் காணப்படும் சத்துக்கள் அற்புதமானவை. இது தசைகளை வலுவாக்கும் புரதம், இதயத்திற்கு ஏற்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் கொண்டவை. வாரம் இருமுறை மீன் சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும். உடலுக்கு தேவையான பல சத்துகள் மீனில் உள்ளன. ஆனால் இந்தியாவில் விற்கப்படும் சில மீன்கள் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தானவை. இந்தியாவில் பரவலாக வாங்கி சமைக்கப்படும் 5 மீன்களை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
சுறா:
சுறா மீனில் காணப்படும் அதிக அளவு பாதரசம் உள்ளது. இந்த தனிமம் கர்ப்பிணியால் உட்கொள்ளப்படும்போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்குமாம். அதனால் கர்ப்பிணிகள் சுறா மீனை சாப்பிடக் கூடாது.
வாள்மீன் (கோத்):
சுறா எபப்டி கர்ப்பிணிக்கு ஏற்றதில்லையோ அதை போல வாள்மீனும் நல்லதல்ல. ஏனென்றால் இதிலும் அதிகளவு பாதரச தனிமம் இருப்பதாக சொல்லப்படுகிறது. கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக இந்த மீனை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்களே... மழைக்காலத்தில் இந்த மாதிரியான உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...!
கானாங்கெளுத்தி (அய்லா):
பாதரசம் அளவை அதிகம் கொண்டிருக்கும் மீனில் கிங் கானாங்கெளுத்தியும் அடங்கும். இது கருவுற்ற பெண்களின், கருவின் நரம்பு மண்டலத்தை பாதிப்படைய செய்கிறது.
ஷீலா மீன்:
ஷீலா மீன் என அழைக்கப்படும் பாராகுடா மீனை உண்பதும் ஆபத்து தான். இந்த மீனில் உள்ள பாதரசம் காரணமாக கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய மீனாகும்.
டைல்ஃபிஷ் (கோரல்):
டைல்ஃபிஷ் என்பது கோரல் என்றும் சொல்லப்படுகிறது. கடலின் அடிமட்டத்தில் உள்ள இந்த மீன் அதிக அளவு பாதரசத்தை கொண்டுள்ளது. இதனால் கருக்கலையும் அபாயம் உள்ளது. ஆகவே கர்ப்பிணிகளுக்கு இந்த மீன் ஏற்றதல்ல.
இதையும் படிங்க: சுக பிரசவம் ஆகனுமா...? அப்ப கர்ப்ப காலத்தில் தினமும் காலை 'இத' மட்டும் செய்ங்க..!
வௌவால் மீன்:
மார்லின் என சொல்லப்படும் வௌவால் பெரிய மீன் ஆகும். இதிலும் அதிகளவு பாதரசம் உள்ளது. இதனை உண்பதால் கருக்கலைய கூட வாய்ப்புள்ளது.
ரோகு:
கெண்டை மீன் இனத்தை சேர்ந்த ரோகு மீனை கருவுற்ற பெண்கள் சாப்பிடக் கூடாது. நம் ஊரில் இது அதிகம் கிடைக்கிறது. சில ஆய்வுகளில் இந்த மீனில் ஈயம், காட்மியம் அதிகளவு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வயிற்றில் வளரும் சிசு பாதிப்படைய வாய்ப்புள்ளது.
இந்த மீன்களில் உள்ள பாதரச அளவானது எடை, வயது, அவை வசித்த நீர் ஆகிய காரணிகளைப் பொறுத்தது. அதே சமயம் கர்ப்பிணிகள் மீன் சாப்பிட விரும்பினால் குறைந்த பாதரசம் அளவு உருக்கும் மீன்களை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடிய மீன்கள்:
1). நெத்திலி மீன்
2). மத்திமீன்
3). கட்லா
4). மடவை மீன்
5). பாம்ஃப்ரெட்
இந்த மீன்களில் மற்ற மீன்களுடன் ஒப்பிடும்போது பாதரசத்தின் அளவு குறைவாக உள்ளது. இதனால் கரு வளர்ச்சிக்கு நல்லது. அதிலும் உடலுக்கு பல நன்மைகளை செய்யும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் இதில் அதிகம் காணப்படுகின்றன.