
தீபவாளி பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கொண்டாட்டங்களும், மகிழ்ச்சியும் நிறைந்த இந்நாளில் குழந்தைகளின் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதை மறந்துவிடாதீர்கள். ஏனெனில் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கப்படும். இதனால் சில சமயங்களில் தீக்காயங்கள் மட்டுமின்றி, வெடிக்கப்படும் வெடியில் இருந்து வரும் புகையால் கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குழந்தைகளை தாக்கும். அந்த வகையில், இந்த தீபாவளியை உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு சில எளிய வழிகள் இங்கே.
இதையும் படிங்க: 365 நாட்களில் தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படும் அதிசய கோயில் பற்றி தெரியுமா? எங்கு இருக்கிறது?
தீபாவளிக்கு குழந்தைகளை பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ் :
குழந்தையை வெடி புகையில் இருந்து விலக்கி வை
பொதுவாகவே தீபாவளி நாளில் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வார்கள் அதுவும் குறிப்பாக குழந்தைகள் அன்னாளில் வெளிப்புற விளையாட்டு தான் அதிகமாக ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பட்டாசு வெளியில் இருந்து வரும் புகை மூட்டமானது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வசிக்கும் பகுதியில் தீபாவளி நாளில் காற்று மாசு அதிகமாக இருந்தால் உங்களது குழந்தைகளை வீட்டை விட்டு அனுப்பாமல், வீட்டுக்குள்ளேயே வைத்திருங்கள்.
வெடிப்புகையிலிருந்து வரும் காற்றை குழந்தைகள் சுவாசித்தால் ஆஸ்துமா போன்ற பிற தீங்கு விளைவிக்கும் சுவாச பிரச்சனைகள் ஏற்படும். ஒருவேளை அவர்கள் வெளியே செல்ல விரும்பினால் அவர்களுக்கு N95 மாஸ்க் அணிவியுங்கள்.
இதையும் படிங்க: வெடி புகை பாதிக்காமல் 'ஆஸ்துமா' நோயாளிகள் எப்படி 'தீபாவளி' கொண்டாடனும் தெரியுமா?
கண் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
உங்கள் குழந்தை தீபாவளி நாளில் பட்டாசு வைக்கும் போது அதிலிருந்து வரும் தீப்பொறி அல்லது பட்டாசு பார்க்க கூடாது. முகத்தை திருப்பிக் கொள் என்று உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது அவர்களுக்கு பாதுகாப்பு கண்ணாடி அணிய ஊக்குவியுங்கள். இதனால் அவர்களது கண் பாதுகாக்கப்படும் அதுபோல பட்டாசு வெடிக்கும் போது கைகளை கண்ணில் வைக்க கூடாது என்றும் கற்றுக் கொடுங்கள். வெடி வெடித்த பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிய பிறகு கண்களை தொட வேண்டும் என்று சொல்லுங்கள்.
கண்காணிக்க மறக்காதீர்கள்
உங்கள் குழந்தை பட்டாசு வெடிக்கும் போது அவர்களுக்கு அருகில் எப்போதுமே இருங்கள். அதுபோல குழந்தையின் வயதிற்கு ஏற்றார் போல அவர்களுக்கு பட்டாசு கொடுங்கள். தீக்காயங்கள் அல்லது பிறை ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க உங்கள் குழந்தை பட்டாசு வைத்த உடன் அதிலிருந்து தூரமாக இருக்குமாறு சொல்லிக் கொடுங்கள்.
ஒலியால் பாதிப்பு வரும்
பொதுவாக குழந்தைகளின் காது ரொம்பவே உணர்திறன் உடையது. எனவே தீபாவளி நாளில் வெடிக்கப்படும் வெடியின் சத்தத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் இருந்தால் அது அவர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் தெரியுமா? எனவே ஐந்து வயது குட்பட்ட குழந்தைகளின் காதில் பஞ்சு உருண்டைகளை வைக்கவும்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்
தீபாவளி நாளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, குழந்தைகள் வெடி வைக்கும் போது அவற்றிற்கு அருகே எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைக்க வேண்டாம்.
உணவு பாதுகாப்பு அவசியம்
தீபாவளி நாளில் வீட்டில் பண்டம் பலகாரங்கள் செய்வது வழக்கம். எனவே, இந்நாளில் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான இனிப்புகள் மற்றும் எண்ணெய் பலகாரங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, ஃபுட்பாய்சன் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே கவனமாக இருங்கள்.