வீட்டில் எறும்புகள் அட்டகாசம் செய்யுதா? அவற்றை எளிதாக விரட்ட.. ஒரே ஒரு கிராம்பு போதும்!!

First Published | May 29, 2023, 5:05 PM IST

Home Remedies for Ants: வீட்டில் படையெடுக்கும் எறும்பு கூட்டத்தை எளிதாக விரட்ட இங்கு சில பயனுள்ள குறிப்புகளை காணலாம். 

வீட்டில் ஏதேனும் தின்பண்டங்கள் வைத்தால் எறும்புகள் அதை வட்டமிட்டு கொறிக்கத் தொடங்கிவிடும். பலகாரங்கள் மட்டுமில்லை ஆடைகள், படுக்கை விரிப்பு, சர்க்கரை உள்ளிட்ட மற்ற உணவு பொருள்களையும் அவை விட்டுவைக்காது. பல நேரங்களில் நீண்ட வரிசையில் எறும்புகள் வீட்டை ஆக்கிரமிக்கும். இருந்தும் அவற்றை பெரும்பாலானோர் கொல்லமாட்டார்கள். இப்படி நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் எறும்புகளை கொல்லாமல் வீட்டில் இருந்து வெளியே எடுப்பது எப்படி என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம். 

உப்பு 

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, அதில் 4 முதல் 5 தேக்கரண்டி உப்பு போடுங்கள். பின்னர் தண்ணீர் கொதித்ததும், இறக்கி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிவிடுங்கள். இந்த தண்ணீரை எறும்புகளின் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் தெளித்தால் அவை அங்கிருந்து விலகும். 

சுண்ணாம்பு

சுண்ணாம்பு கட்டிகளால் வரையும் கோடுகளை எறும்புகள் கடப்பதில்லை. இப்போது கடைகளில் சுண்ணாம்பு கட்டி வாங்கி பயன்படுத்துங்கள் அல்லது எறும்புகளை விரட்ட பூச்சிகளை விரட்டும் சாக்பீஸ் சந்தைகளில் கிடைக்கும். அவற்றையும் வாங்கி பயன்படுத்தலாம். 

Tap to resize

கற்பூரம் 

எறும்புகள் நம்முடைய ஆடை படுக்கை விரிப்பு போன்றவற்றில் நுழைவதால் இரவில் தூக்கம் தொலையும். அளவில் சிறியதாக உள்ள எறும்பை கொல்வதும் கடினம் தான். ஆனால் அவை கடிக்கும் போது சருமம் சிவப்பு நிறமாக மாறும். இதில் இருந்து விடுபட வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் கற்பூரத்தை பயன்படுத்துங்கள்.

பூச்சிகள் வீட்டிற்கு வராமல் தடுக்கும் செடிகள்!

கற்பூரத்தை பொடி செய்து எறும்புகள் நடமாடும் வழியில் தூவுங்கள். கற்பூரத்தின் வாசனையால், எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழையாது. அலமாரிகளிலும் மற்ற இடங்களிலும் கற்பூரத்தை வைத்தால் பூச்சிகளிடம் இருந்து தற்காக்கலாம். 

மிளகாய் 

எறும்புகளை விரட்ட மிளகாயையும் பயன்படுத்தலாம். மிளகாயின் வாசனையால் எறும்புகள் விலகும். மிளகாய் வாசனையை அறியும் போது எறும்புகள் அந்த இடத்தை விட்டு ஓடிவிடும். மிளகாயை அரைத்து அந்த நீரை எறும்புகள் அதிகம் உள்ள இடத்தில் தெளிக்கவும். 

கிராம்பு

கிராம்பு வைத்தியம் மூலம் எறும்புகள் வீட்டிற்குள் நுழைவதையும் தடுக்கலாம். கிராம்பு வாசனை ரொம்ப வலுசாக இருப்பதால் எறும்புகள் அதை விரும்புவதில்லை. உங்களுடைய வீட்டில் எறும்புகளின் தொல்லை அதிகமாக இருந்தால், கிராம்புகளை அவற்றின் அருகே வைக்கவும். சிறிது நேரத்தில் அவை ஓடிவிடும். 

வீட்டில் கொசுக்கள் வராமல் தடுக்கும் செடிகள்!!

Latest Videos

click me!