மண்பானையில் சமையல் செய்யுறப்ப இந்த விஷயத்தை கண்டிப்பா கவனிங்க!!!

First Published May 27, 2023, 3:46 PM IST

மண்பானையில் சமைத்த உணவுகளின் ருசி நம் நாவில் நாட்டியம் ஆடும் என்றாலும், அதில் சமைக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே அந்த உணவுகளை எந்த பாத்திரத்தில் சமைக்கிறோம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமே. முந்தைய காலக்கட்டங்களில் தண்ணீர் குடிக்கும் பானை முதல் சமைக்கும் பாத்திரங்கள் வரை மண்ணால் செய்யப்பட்டவை தான். பொதுவாக மண்பானை சமையல் வாசனையாகவும் பார்த்ததும் உண்ண தூண்டும் ருசியிலும் இருக்கும். அது மட்டுமில்லை அதில் பலவகையான சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றனவாம்.

மண்பானையில் சமைக்கும் உணவுகளில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், சல்பர் போன்றவை உள்ளன. இவை நம் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவும். ஆனால் மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்கும் முறை பலருக்கு தெரிவதில்லை. அதை இங்கு காணலாம். மண்பானைகளை வாங்கி புதிதாக சமைக்கும் போது வெறும் தண்ணீரில் கழுவி அதை சமைக்கப் பயன்படுத்தக் கூடாது. 

புதிதாக கடையில் மண்பானைகளை நீங்கள் வாங்கினால் முதலாவதாக 8 முதல் 10 மணி நேரம் அதை தண்ணீரில் ஊற விட வேண்டும். மண்பாண்டங்களில் காணப்படும் நுண்துளைகள் ஈரப்பதத்தை உண்டாக்கும். இது உணவை வேக வைக்கவும், வெப்பத்தை தக்க வைத்து கொள்ளவும் தகுந்த தொழில்நுட்பம். மண்பானை 8 முதல் 10 மணி நேரம் ஊறிய பின்னர் அதில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இப்படி செய்வதால் புதிய மண்பாண்டம் சமையல் செய்ய தயாராகிவிடும். 

நீண்ட ஆயுளுக்கு ஜப்பானியர்கள் பின்பற்றும் உணவு ரகசியங்கள்!!

மண்பானையில் சமையலுக்கு முன் செய்ய வேண்டியது!! 

கொஞ்சமாக கோதுமை மாவை மண்பானையில் போட்டு எல்லா பக்கத்திலும் நன்கு விரவி விடுங்கள். இப்படி மாவினை தேய்ப்பதால் மண்பாண்டம் தயாரிக்கும் போது ஒட்டிக் கொண்ட மண் துகள்கள் உதிர வழிவகுக்கும். தூசியும் சுத்தமாகும். அடுத்து புதிய பானையை அடுப்பில் வைத்து மாவினை கருகும் வரை வெப்பப்படுத்துங்கள். பின்னர் இறக்கி ஆறியதும் துணியால் பானையை சுத்தமாக துடைத்து கொள்ளுங்கள். நன்கு குளிர்ந்த பின்னர் அந்த மண்பானையை கழுவி சமைக்கப் பயன்படுத்தலாம். 

இதையும் படிங்க: ஓம இலைகளின் சாற்றில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா? வீட்டுல கண்டிப்பா இந்த செடியை வளர்க்க ஆரம்பிங்க!!

click me!