வீட்டில் தொல்லை செய்யும் கரப்பான் பூச்சிகளை ஓட ஓட விரட்ட.. பயனுள்ள எளிய டிப்ஸ்!!

First Published May 25, 2023, 3:01 PM IST

வீட்டு சமையலறையில் உள்ள பொருள்களை வைத்தே கரப்பான் பூச்சிகள் தொந்தரவிலிருந்து விடுபட முடியும். கரப்பான் பூச்சிகளை விரட்ட பயனுள்ள குறிப்புகள் உள்ளே.. 

வீடுகளில் கரப்பான் பூச்சி அலைவது அருவருப்பை மட்டுமில்லை, ஆரோக்கிய குறைபாடுகளையும் உண்டாக்கும். சமையலறைகளில் சுற்றும் கரப்பான் பூச்சிகள் நாம் உணவு உண்ணும் தட்டு முதலான பாத்திரங்கள், சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருள்கள் என எல்லாவற்றிலும் உலா வரும். அதை விரட்ட நாம் பல முயற்சிகள் எடுத்தாலும், சில நாட்களில் கரப்பான் பூச்சிகள் மீண்டும் வருகின்றன. அவற்றை விரட்டும் வழிகளை இங்கு காணலாம். 

கரப்பான் பூச்சியை விரட்டும் லட்டு!! 

உங்கள் வீட்டில் இருந்து கரப்பான் பூச்சியை முற்றிலுமாக ஒழிக்க சில பொருட்களை சேர்த்து லட்டுக்களை உருவாக்கி வைக்க வேண்டும். 

தேவையான பொருள்: 

*போரிக் பவுடர் - 4 டீஸ்பூன்

*சோள மாவு 

*சர்க்கரை

*பால் (தேவைப்பட்டால்) 

செய்முறை 

கரப்பான் பூச்சி விரட்ட லட்டு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களையும் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். அதனை சமையலறையில் பூச்சிகள் நடமாடும் இடங்களில், குப்பை தொட்டிக்கு அருகில் வைத்துவிடுங்கள். குறிப்பாக கேஸ் அடுப்பின் ஓரத்தில், பிரிட்ஜின் கீழே மற்றும் கரப்பான் பூச்சிகள் எங்கிருந்து வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அங்கும் அந்த உருண்டைகளை வைக்கலாம். இந்த லட்டுகளால் கரப்பான் பூச்சிகள் குறையும். இந்த லட்டுகளை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் லட்டுகளை பாலுடன் பிசையலாம். இது கரப்பான் பூச்சிகளை விரைவாக ஈர்க்கும். 

கரப்பான் பூச்சி விரட்ட டிப்ஸ் 

கரப்பான் பூச்சியை உங்கள் வீட்டில் இருந்து மொத்தமாக விரட்டியடிக்க மற்றொரு வழிமுறையும் உள்ளது. 

தேவையான பொருள்: 

*ஊதுபத்தி

*கற்பூரம் 

*ஸ்ப்ரே பாட்டில்

*எலுமிச்சை 

*வினிகர்

*பஞ்சு

செய்முறை

ஒரு காகிதத்தில் கற்பூரம் ஊதுபத்தி ஆகியவற்றை போட்டு பொடியாக இடித்துக் கொள்ளவும். இதை ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு வினிகர், எலுமிச்சை சாறு, அரை கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை நன்றாக குலுக்கி சமையலறையில் கரப்பான் பூச்சி நடமாடும் இடங்களில் தெளிக்கவும். இந்த மருந்து தெளிக்காத இடங்களில் பஞ்சில் மருந்தை நனைத்து வைக்கவும்.

எச்சரிக்கை: மேற்குறிப்பிட்ட டிப்ஸுகளை வைத்து கரப்பான்பூச்சிகளை ஒழிக்க நீங்கள் முயற்சி செய்யும் போது குழந்தைகளுக்கு அந்த பொருள்கள் கிடைக்காத வண்ணம் கவனமாக செயல்படுங்கள். செல்ல பிராணிகளும், குழந்தைகளும் அவற்றை தொடாமல் பார்த்துக் கொள்ளவும். கரப்பான் பூச்சியை முற்றிலும் ஒழிக்க வீட்டில் குப்பை, கழிவுகளை சேர விடக்கூடாது. அவற்றை நீக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

இதையும் படிங்க:பூச்சிகள் வீட்டிற்கு வராமல் தடுக்கும் செடிகள்!

click me!