'திருபாய் அம்பானி' நினைவிடத்துக்கு போக இவ்ளோ தானா கட்டணம்!! எப்போ பொதுமக்களுக்கு அனுமதி தெரியுமா?

First Published May 23, 2023, 1:05 PM IST

திருபாய் அம்பானியின் நினைவிடம் குஜராத் மாநிலத்தில் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள சோர்வாட் என்ற கடலோர கிராமத்தில் அம்பானிக்கு சொந்தமான வீடு உள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையான இந்த வீடு அவருடைய முன்னோர் வசித்தது. இப்போது 5 கோடி ரூபாய் செலவில் இந்த வீடு 'திருபாய் அம்பானி நினைவு இல்லம்' என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது. 

திருபாய் அம்பானி நினைவாக இந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றியுள்ளார் அம்பானி. உலகின் பணக்காரர்களின் ஒருவராக இருந்த திருபாய் அம்பானி, இந்த வீட்டில் தான் பிறந்தாராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 2 மாடிகள் கொண்ட இந்த மாளிகை  நினைவிடமாக மாற்றப்பட்டது. இந்த நினைவிடத்தில் பித்தளை, செம்பு பாத்திரங்கள், மர சாமான்கள், அம்பானி குடும்பத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பிற பொருட்களும் உள்ளன. 

அமைப்பு 
இந்த நினைவிடம் 1.2 ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளது. சுற்றிலும் பசுமை, இதன் தோட்டப் பகுதி மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அம்பானிக்கு சொந்தமான இந்த நினைவிடத்தில் உள்ள ஒரு சிறிய திரையரங்கில் திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறு   திரையிடப்படுகிறது. திருபாய் அம்பானியின் இந்த வீடு 2011ஆம் ஆண்டு நினைவு இல்லமாக மாற்றி குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டது. இது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இங்கு சென்று பார்வையிட நினைப்பவர்கள் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை செல்லலாம். இங்கு செவ்வாய் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்று பார்வையிடலாம். திங்கள்கிழமை மட்டும் அனுமதியில்லை. இங்கு சென்று பார்வையிட வெறும் 2 ரூபாய் தான் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

திருபாய் அம்பானி மும்பையில் அசைக்க முடியாத வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்னரும் அடிக்கடி சோர்வாட் செல்வதை பழக்கப்படுத்தியுள்ளார். சோர்வாட் கிராமத்தில் தோட்டங்கள், இரண்டு பள்ளிகள், ஒரு மருத்துவமனை ஆகியவற்றை அம்பானி குழுமத்தினர் கட்டியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது

click me!