Food

ஜப்பானிய உணவு

ஊட்டச்சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகளே ஜப்பானிய மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம். 

Image credits: Getty

மீன்

சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி ஆகிய கொழுப்பு நிறைந்த மீன்களை ஜப்பானியர்கள் அதிகம் உண்கின்றனர். இது இதய நோயை குறைக்கும்.  

Image credits: Getty

சமச்சீர் உணவு

ஜப்பானிய உணவுகளில் மீன், காய்கறிகள், அரிசி, டோஃபு போன்ற பொருட்கள் சரிசமமாக பரிமாறப்படும். இதில் புரதங்கள், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன.  

Image credits: Getty

தாவரங்கள்

ஜப்பானிய உணவு வகைகளில் கடற்பாசி, முள்ளங்கி, முட்டைக்கோஸ், மூங்கில் தளிர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் இடம்பெறும். 

Image credits: Getty

புளித்த உணவுகள்

சோயா சாஸ், ஊறுகாய்களாக தயாரிக்கப்பட்ட காய்கறிகள் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் ஜப்பானிய உணவு வகைகளில் இருக்கும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

Image credits: Getty

கிரீன் டீ

ஜப்பானில் பரவலாக காணப்படுவது பச்சை தேயிலை பானம். இதில் உள்ள கேட்டசின்கள் என்ற ஆக்ஸிஜனேற்றங்கள் இதய நோய், சில புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். 

Image credits: Getty

கட்டுப்பாடு

சிறிய பகுதிகளாக உணவு பரிமாறப்படுகின்றன. இதனால் அதிகம் சாப்பிடாமல் தவிர்த்து எடையை பராமரிக்கிறார்கள். 

Image credits: Getty

பருவகால உணவு

ஜப்பானியர்கள் பருவகால பொருட்களை உணவில் பயன்படுத்துவார்கள். இதனால் உடலுக்கு காலத்திற்கு ஏற்ற ஆற்றல் கிடைக்கும். 

Image credits: Getty

டெக்னிக்

ஹரா ஹச்சி பு என்னும் ஜப்பானிய நடைமுறை, வயிறு 80% நிரம்பும் வரை சாப்பிடுவதை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம். 

Image credits: Getty

பதப்படுத்தப்பட்ட உணவு

அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான உடலை பேண முடியும். 

Image credits: Getty

கலாச்சாரம்

ஜப்பானிய கலாச்சாரம் நீண்ட ஆயுளை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். சமூக இணைப்பு, உடல் செயல்பாடு போன்றவை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவும்.  

Image credits: Getty

கோடைகாலத்தில் நுங்கு சாப்பிட்டால் விலகும் 5 நோய்கள்!!

கருப்பு கவுனி அரிசியில் காணப்படும் மருத்துவ குணங்கள்!!

அடிக்கடி கடல்பாசியை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

கொத்தவரங்காயில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!!